கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

தமிழ் கவிதை | Tamil kavithai

தமிழ் மொழியின் செழுமை தமிழ் கவிதை (Tamil Kavithai) சொல்லும். தமிழ் கவிதை (Tamil Kavithai) இனிமையும் எளிமையும் மற்றும் சிறந்த இலக்கண நடை கொண்டவை. தமிழ் கவிதை (Tamil Kavithai) மகிழ்ச்சி, காதல், நட்பு போன்ற பல விடயங்களை பேசும். உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட, தாய் மொழியாம் தமிழில் எழுதப்பட்டது தமிழ் கவிதைகளை இங்கு படித்து மகிழுங்கள்.

பிரபலமான கவிதைகள்

மேலும் பார்க்க

கவிதை இலக்கணம் | Kavithai Ilakkanam

கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும். மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

இது ஒரு கவிதை உருவாக்கும் முறை, அதன் உருவாக்கம் மற்றும் வடிவம் பற்றிய நாம் அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் அதன் உருவாக்கம் சரியானது என்று நினைவில் கொண்டு கவிஞர்கள் எழுத வேண்டும். ஒரு கவிதை அதன் அழகை அளவிட முக்கியமான உள்ளடக்கங்களையும், கவிதை இலக்கணத்தையும் உள்ளடங்கியே இருக்கும்.

பிரபலமான கவிதை வரிகள்

காதல் தமிழ் கவிதைகள் ( Kadhal Tamil Kavithai )

புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை.

அம்மா தமிழ் கவிதைகள் ( Amma Tamil Kavithai )

உயிருக்குள் அடைக்காத்து உதிரத்தை பாலாக்கி.. பாசத்தை தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை.

தனிமை தமிழ் கவிதைகள் ( Thanimai Tamil Kavithai )

ஒரு போலியான உறவை நேசித்து நாமே நம் மனதை காயப்படுத்தி கொள்வதை விட தனிமை மேலானது .

அப்பா தமிழ் கவிதைகள் ( Appa Tamil Kavithai )

தாய்க்கு பின் தாரம் ஆனால் தந்தைக்கு பின் தந்தை மட்டுமே யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது .. அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

ஏமாற்றம் தமிழ் கவிதைகள் ( Ematram Tamil Kavithai )

ஏமாற்றும் போது ஒன்றை மட்டும் நினைவில் கொள். ஒரு நாள் நீயும் ஏமாற்ற படுவாய் என்று.

நட்பு தமிழ் கவிதைகள் ( Natpu Tamil Kavithai )

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்... ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்

தன்னம்பிக்கை தமிழ் கவிதைகள் ( Motivational Tamil Kavithai )

காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம் ஆனால் வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது.

சோக கவிதைகள் தமிழ் ( Tamil Sad Quotes )

அடிக்கடி அழைத்த அலைபேசி எண் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கிறது அ ழைக்கவும் முடியாமல் அழிக்கவும் முடியாமல்.

மேலும் பார்க்க

கவிதை விளக்கம் | Kavithai Vilakam

கவிதை வாசகனின் மூலமே தன்னை முழுமைப்படுத்திக்கொள்கிறது. சங்கப்பாடல்கள் தொடங்கி திருக்குறள் என வளரும் பழந்தமிழ் இலக்கியங்கள் எதற்குமே அதன் ஆசிரியர்கள் பொருள் எழுதி வைத்துச்செல்லவில்லை. பின்னால் வந்த பல தமிழ் அறிஞர்களே அவற்றை வாசித்துப் பொருள் கூறினர்.

கவிதை திட்டவட்டமான பொருளை அல்லது அர்த்தத்தைச் சொல்ல உருவாகுபவையும் அல்ல. அப்படி அதன் பயன் அதுதானென்றால் கவிதை என்ற இலக்கிய வடிவை ஒருவர் தேர்ந்தெடுக்காமல் கட்டுரை, கடிதம் போன்ற வடிவங்களைத் தேர்ந்தெடுப்பாரேயானால் அவரால் இன்னும் எளிதாகத் தான் சொல்ல வந்ததை வெகுசன மக்கள் முன் சமர்ப்பிக்க முடியும். ஆக கவிதை என்பது சொற்கள் மூலம் வாசகனின் உணர்வை உந்தி தள்ள முனையும் ஓர் வடிவம். அவ்வுணர்வின் மூலம் தனது பொருளை பல்வேறு வகையாக்கவே கவிதை முனைகிறது.

தமிழ் கவிதை ( Tamil kavithai )

மூன்றெழுத்துக் கவிதை தமிழ், தங்கத்தேரில் இழுத்து தரணியில் அமரச்செய்தவன் எம் பாரதி, தமிழைத் தாலாட்டியவன் திருவள்ளுவன். தாயை அம்மா என்று அழைத்த போது ஆரம்பமானது எனது தமிழ்ப் பயணம்., தகப்பன் சொன்ன சிறு சிறு கவிதைகளில் விரும்பினேன் என் தமிழை.,. ஆசான் கற்பித்ததில் அறிந்தேன் என் தமிழின் பெருமையை, தமிழுக்கும் அமுதென்று பேர்.....இன்று நான் சொல்லுவேன் தமிழுக்கு உயிர் என்று பேர் அந்த உயிர் போய்விடில் இந்த உடலுக்கு சவம் என்று பேர்!

கவிதையைக் கலையின் அரசி என்பார்கள். கவிதைக்கலை என்பது நுண்கலைகளுள் கவின்கலை. கவிதைக்கலையைக் கல்லாக்கலை என்றும் கூறுவர். இசை, ஓவியம், சிற்பம் போன்ற பிற கலைகள் அனைத்துயிர்ளையும் தம்மில் சேர்த்து இன்புறுகின்றன. ஆனால் கவிதைக்கலையானது மனிதர்ளுக்கு மட்டுமேசொந்தமானது. மனிதனால் மட்டுமே அனுபவிப்பதற்குரியது.

"கவிஞர் தம் உள்ளத்தில் தோன்றிய அரிய உண்மைகளை இன்ப வடிவமாகத் தெளிந்த மொழியில் வெளியிடுவது கவிதை" என்பது கவிமணியின் கருத்தினால் புலப்படும். ஒரு கவிஞன் எழுதிய கவிதையை எண்ணும் போதும், அதை நூல்களில் காணும்போதும் இரண்டு முக்கிய அம்சங்கள் புலப்படுகின்றன. ஒன்று அதன் வடிவம் மற்றது அதன் பொருள். வடிவம் என்பது செற்களால் அமைவது. கருத்தைத் தாங்கி நிற்பது. வடிவம் புறத்திலிருந்து கவிதையில் வந்து பொருந்தும் பண்பன்று. உணர்ச்சி அல்லது அனுபவம் கவிஞன் உள்ளத்தில் கவிதை உருக்கொள்ளும்போது வடிவை நிச்சயிக்கின்றன. கவிதையின் பொருள், வடிவம் ஆகிய இரண்டிலும் பொருளே சிறப்புடையது. பொருளுக்கு ஏற்ற வடிவம் அமைவதே கவிதையின் சிறப்புக்கு காரணமாகும். அப்படியல்லாது வடிவத்திற்கு முதன்மையிடம் அளிக்கபட்டால் பொருட்சிறப்புக் குன்றில் கவிதை பொலிவை இழக்கும். கவிதையில், சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது.

ஒரு மொழியின் பழைமையையும் பெருமையையும் தெரிந்துகொள்ள அதன் இலக்கியங்களைப் படித்தால் போதும். தமிழ் மொழியின் செழுமையினை அறிய இந்த கவிதை (Kavithai) தொகுப்பு ஒரு சிறிய உதாரணம். இந்த பக்கத்தில் உள்ள கவிதைகள் ((Kavithaigal)) தமிழ் மொழியின் சிறப்பினை விவரிக்கக்கூடியவை. இங்கே வாழ்வின் வெவ்வேறு கோணத்துக்கும் கவிதைகள் உள்ளன. படித்து ரசித்து உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.

எங்களது Whatsapp குழுவில் இணைய

புதிய கவிதைகளின் தொகுப்பு நிரல்களை காண இங்கே கிளிக் செய்யவும்

இப்போது சேரவும்
tamil kavithai quotes

தமிழ் கவிதை

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்கிற வகையில், தமிழ் மொழியின் சிறப்பினைப் பற்றி எங்கள் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இந்த இணையதளத்தில் தமிழ் கவிதை தொகுப்புகளாக பதிவு செய்துள்ளோம்.

மேலும் படிக்க