கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

வாழ்க்கை கவிதைகள்

இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்.

வாழ்க்கை கவிதைகள் | Life quotes in tamil

வணக்கம் அனைவரையும் எங்கள் வலைப்பதிவிற்கு வரவேற்கிறோம். வாழ்க்கை என்பது ஒரு அழகிய கவிதைகள் போல் தான் அதை ரசிப்பதும் வெறுப்பதும் அவரவர் மன நிலையை பொறுத்தே அமைகிறது ஒவ்வொரு படிநிலையும் ஒவ்வொரு ஆசான் எந்த படிநிலையும் வந்த படியே செல்வதில்லை.. ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்கும் ஏதோ ஒன்றை ஏற்கச் சொல்லும்.. கற்றுக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருந்தால் வசப்படுமே வாழ்க்கை. வாழ்க்கையில் நீங்கள் படிக்கும் புத்தகங்கள் அறிவையும், நீங்கள் பழகும் மனிதர்கள் அனுபவத்தையும் கற்றுத்தருகிறார்கள். ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல. விழுந்த போதெல்லாம் தன்னம்பிக்கையுடன் எழுந்தான் என்பதே பெருமை. இந்த பதிவில் வாழ்க்கை கவிதை( Life Quotes in Tamil ) வரிகள் பதிவை காணலாம்.

போராடி வாழ்வதற்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல அது பூ வனம் .... ரசித்து வாழ்வோம்....

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...

மனமும் கண்ணாடியைபோல்தான் உடையும்வரை யாரையும் காயப்படுத்துவதில்லை...

இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்...

நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில் நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை...

யாருக்காகவும் காத்திருக்காதே நீ காத்திருப்பதால் உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை...

கொடுப்பது சிறிது என்று தயங்காதே. வாங்குபவர்க்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே. இழப்பவர்க்கு அது பெரிது.

வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும் இருப்பது கரை என்னும் நம்பிக்கை...! அதில் பீறிட்டு ஓடுகிறது விதி என்னும் வேடிக்கை...!

அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!! அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!

உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை, பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்

அன்று உனக்காக சிரித்தவர்கள், இன்று உனக்காக அழுதால்.. நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது ..

காணாமல் போனவர்களை தேடலாம் அதில் சிறிதும் தவறு இல்லை. கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே...!

தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ... அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்...

விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்... விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்... இவை தான் மனிதனின் எண்ணங்கள்...!

நம் பயம் எதிரிக்கு தைரியம் நம் அமைதி அவனுக்கு குழப்பம் குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை...

விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் விசயங்களில் தான் அதிக. தோல்விகளை சந்திக்கின்றோம்...

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

ஆயிரம் பேரை எதிர்த்து கூட நில்..! ஆனால் யாரையும் எதிர்பார்த்து நிற்காதே..

kadhal kavithaigal | Best love quotes in tamil

உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்.. புரிகின்ற வரை வாழ்க்கையும் ஒரு புதிர் தான்..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

என்ன நடந்து விடுமோ என்று யோசித்து இருப்பதை விட, மோதி பாருங்கள் எழுந்தாள் வெற்றி விழுந்தால் அனுபவம்.

kadhal kavithaigal | Best love quotes in tamil

நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும்... ஆனால் ஒரே நாளில் மாறி விடாது.

kadhal kavithaigal | Best love quotes in tamil

ரசிப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால் போதும் கண்கள் காணும் அனைத்தும் பேரழகாய் தெரியும்..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

ஒரே இழந்த இடத்தை பிடித்து விடலாம், ஆனால் இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க இயலாது..!

மேலும் பார்க்க

சில இழப்புக்கள் வலியை தருகின்றது சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது

மரணத்திற்கு ஒரு நிமிட தைரியம் போதும் வாழ்வதற்கு ஒவ்வொரு நிமிடமும் தைரியம் வேண்டும்.

அவமானத்தின் வலி அழகிய வாழ்க்கைக்கான வழி...

தோல்வி உன்னை வீழ்த்தும் போதெல்லாம் குழந்தையாகவே விழு மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க...

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட... அதிக புரிதல் இருப்பதே சிறந்தது...

அனைத்துக்கும் காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கையை ரசிக்க முடியாது

மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம் அதை செம்மையாக வைத்து கொண்டால் உன் வாழ்வு வளம் பெரும்.

இன்பமோ துன்பமோ அனுபவிக்கபோவது நீ ..எனவே முடிவும் உனதாகட்டும்

தொலைந்து போன நாட்களைத் தேட முயலாதீர்கள்... வருகின்ற நாட்களை இன்பமாக்குங்கள்... சில பெறுதலும் சில மறைதலும் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமானது...!

உயர நினைக்கும் போது உதவிட யாருமில்லையே! என வருந்தாதே... உன் பலமே நீ தனித்து நிற்பது தான்!

தெழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில் உழைக்க நேரிடும்...!

வாழ்க்கையில் பிடித்த வாழ்க்கையை வாழ்பவன் அதிஷ்டசாலி .. எந்த வாழ்க்கையாக இருந்தாலும் பிடித்து வாழ்பவன் புத்திசாலி...

சோதனை காலத்தில் பொறுமையாக இருங்கள்... மேகங்கள் மூடிக் கொண்டால் சூரியன் கூட பிரகாசிக்க முடியாது... மனிதர்கள் எம்மாத்திரம்.!!!

வாழ்க்கை அதிர்ஷ்டத்தை தருகிறதோ இல்லையோ ஒெவ்வொரு நாளும் அனுபவத்தை தந்து விடுகிறது....

வாழ்க்கையில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று ஒன்று இல்லையென்றாலும் நமக்கு சாதகமாக அமைந்தும் தவறவிட்ட சூழ்நிலைகள் யாவும் கெட்ட நேரங்களே.....

வாழ்க்கை குறுகியது, வாழுங்கள் கோபம் தேவையற்றது, அதை தூக்கி எரியுங்கள் பயம் மோசமானது அதை எதிர் கொள்ளுங்கள் நினைவுகள் இனிமையானவை, அதை ரசியுங்கள்...!

வலி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை வலிகளை கடந்து வழிகள் தேடுவோம்..

கவலையும் கண்ணீரும் ஒரு போதும் நம்மை வாழ வைக்காது..... தைரியமும் நம்பிக்கையுமே நம்மை வாழ வைக்கும்...!

விழிப்பதற்கே உறக்கம்... வெல்வதற்கே தோல்வி... எழுவதற்கே வீழ்ச்சி... வாழ்வதற்கே வாழ்க்கை...!

மீதம் எவ்வளவு உள்ளது என்பது தெரியாமலே நாம் செலவு செய்வது தான் காலம்!

சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ அதற்குரிய கூலியும் அதே போன்று அதிகமாக இருக்கும்..

வாழ்க்கையை அடிக்கடி திரும்பிப் பாருங்கள்... நீங்கள் அடைந்த வலிகளையும் அதனைக் கடந்துவந்த வழிகளும் நம்பிக்கை தரும்...

நேற்று நடந்ததை கடந்து செல்லுங்கள்.." இன்று நடப்பதை கற்று கொள்ளுங்கள்... நாளை நடக்கப்போவதை எதிர் கொள்ளுங்கள்..

இன்று நீ தள்ளிப் போடு செயல்கள் அனைத்தும் நாளை உன்னை ஓய்வெடுக்க விடாமல் ஓட வைக்கும், இன்றே செய்து முடி...!

வாய்ப்பையும் வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்வில் முன்னேறலாம்..!!

வாழும் போதே பிடித்தவர்களுடன் வாழ்ந்து விடுங்கள் வாழ்க்கையில் ஒத்திகைகளும் கிடையாது, சந்தர்ப்பங்களும் திரும்ப வராது..

உளிபடாத கல் சிலையாவதில்லை. வலியில்லாத வாழ்க்கை வளமாவதில்லை...

என்ன நடந்தது என்பதை விட, அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதே வாழ்க்கை..!

வாழ்க்கையில் மாற்றம் என்பது நினைத்தால் மட்டும் வராது, அதற்காக உழைத்தால் மட்டுமே வரும்...

உனக்காக வாழ்கிறேன். என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை!

நடப்பதை மாற்ற முடியாது ஆனால் நினைப்பதை மாற்றிக் கொள்ளலாம் நடக்காது என்று தெரியும் போது.

என் வாழ்க்கையில் நான் சந்தோசமாக வாழ்கிறேன் என்பதைவிட, சமாளித்து கொண்டு வாழ்கிறேன் என்பது தான் உண்மை.

வாழ்க்கை கவிதைகள் (Life Quotes in Tamil)

Life Quotes in Tamil

வாழ்க்கை என்பது சூரியன் அல்ல என்றும் முழுமையாய் பிரகாசிக்க.. அது நிலாவை போன்றது அதில் வளர்பிறை, தேய்பிறை என அனைத்தும் இருக்கும். ஒருநாள் மறைந்தும் போகும். அனைத்து மனிதர்களுக்கும் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும், மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ வேண்டும் போன்ற பல எண்ணங்கள் இருக்கும். நாம் அதற்காக சரியாக செயல்பட்டால் தான் நமது இலக்கை அடைந்து வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ முடியும். எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய தலைவர்கள், பெரியவர்கள், ஞானிகள் போன்றோரின் பொன்மொழிகள் நமது வாழ்வில் வெற்றி பெறுவதற்கான மிகச்சிறந்த வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. அந்த பொன்மொழிகளை பின்பற்றி வாழ்ந்தால் நிச்சயம் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற்று வாழ்வில் மகிழ்ச்சியாக வாழலாம்!

உன் மனதில் என்ன நினைக்கிறாயோ, என்ன எண்ணுகிறாயோ அதுவாகவே நீ மாறுகிறாய் என்பது உண்மை - புத்தர் கூறியதை தான் கீதையும் கூறுகிறது. மற்ற அனைத்து காவியங்களும் வேறு வார்த்தைகளால் வலியுறுத்துகின்றன. ஆகையால், வாழ்வில் நீ என்னவாக வேண்டும் என்பதை நீயே முடிவு செய். நீங்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, வெற்றி என அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்க்கை வாழ்க்கை கவிதைகள் ( Life Quotes in Tamil ) உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கை வாழ்க்கை கவிதைகளை ( Life Quotes in Tamil ) உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷேர் செய்து கொள்ளலாம்!