கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

காதல் கவிதைகள்

நினைவுகளில் நீங்காத ராகம் போல கனவுகளும் காதலுமாய் நிஜங்களை வரிகளாக்கி காதல் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு

காதல் கவிதைகள் | Kadhal Kavithaigal

வணக்கம் அனைவரையும் எங்கள் வலைப்பதிவிற்கு வரவேற்கிறோம். உங்கள் அன்புக்குரியவருக்கு தமிழில் காதல் கவிதைகளை தேடுகிறீர்களா? உங்கள் அன்புக்குரியவருக்கு தமிழில் சிறந்த காதல் கவிதைகளை இங்கே தந்துள்ளோம். வாழ்வில் தோன்றும் உணர்வுகள் பல விதம் என்றாலும் இந்த காதல் மட்டும் வாழ்க்கையின் உயிரில் கலக்கும் ஒரு விதமான அதிசய உணர்வு. காதல் என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் ஒரு அற்புதமான அன்பு. காதல் உறவில் அக்கறை கலந்து ஒர் உணர்வு இருக்கும், கவிதைகளில் காதல் கவிதைகள் (Kadhal kavithaigal) பலராலும் விரும்ப காரணம் அவை மனதிற்கு ஒரு வித்தியாசமான உணர்வை கொடுக்க கூடியவை. காதல் பற்றிய அற்புதமான கவிதைகளை இங்கு நீங்கள் காணலாம்.

நம்மை நேசிக்க ஆயிரம் பேர் இருந்தாலும்நாம் நேசிக்கும் ஒருவரை போல்ஆகி விட முடியாது்!

வாழ்க்கை படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும், எனக்கு பிடித்த உன்னுடன் மட்டுமே

விட்டு கொடுத்து வாழ்வது மட்டுமல்ல காதல் கடைசி வரைக்கும் விட்டு விடாமல் வாழ்வதும் தான் காதல்

புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை

இனிமேல் தேடினாலும் கிடைப்பதில்லை உன்னை போல ஒரு இதயத்தை என் வாழ்க்கையில்

நீ மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா தேசத்திலும் உயிர் வாழ்வேன்…

நீ என்னை விட்ட விலக நினைக்கும் அந்த நொடிக்கு முன் நீ நினைத்து பார்க்க முடியாத தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்...

மனவருத்தங்கள் ஆயிரம் இருந்தாலும் வேண்டுதல் யாவும் உனக்காக..

நம்முடைய சூழ்நிலையை புரிந்துக் கொண்டு எல்லா நிலையிலும் நம்மோடு இருக்கும் உறவு கிடைப்பது வரம்.

யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களோடு வாழ்வது தான் மகிழ்ச்சியான வாழ்க்கை.

நேற்று வரை எதையோ தேடினேன்.. இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக.

நீ மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா தேசத்திலும் உயிர் வாழ்வேன்…

இதனால் தான் பிடிக்கும் என்ற காரணமே இல்லாமல் பிடித்தது, உன்னை மட்டும் தான்!

தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை.

கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் சந்தோசம் உன் அன்பு.

உன் முந்தானையில் ஒரு முகக்கவசம் கொடு ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன் இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.

மன்னித்து விடு என்பது அன்பு அதை அப்போதே மறந்து விட்டேன் என்பது பேரன்பு.

என் கண்களுக்கு நீ காட்டிய அழகை விட என் உள்ளத்துக்கு நீ காட்டிய அன்பே உயர்ந்து!

என் கால்களை உன்னை நோக்கிக் கவர்ந்திழுக்கிறது உந்தன் குறுநகை.

பார்த்தநொடியே கண்களுக்குள் ஓவியமானாய் காத்திருக்கு விழிகளும் உன்னுடன் சேர்ந்து காவியம் பாட

விடியற்பொழுதில் வெளிச்சம் பரவுவதைப்போல் உன் வருகைப்பொழுதெல்லாம் காதல் பரவி அழகாகிறது என் உலகம .

அழகை எதிர்பாக்கும் பெண்களிடம் அன்பை காட்டாதே உன்னிடம் அன்பு வைக்கும் பெண்ணிடம் அழகை எதிர் பாக்காதே

விடியலுக்கும் இரவுக்கும் இடையே உள்ள நேரத்தை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றன உன் நினைவுகள்.

நீ மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா தேசத்திலும் உயிர் வாழ்வேன்

கடவுளிடம் வேண்டுதலென்று எதுவுமில்லை வரமாக நீ கிடைத்ததற்கு நன்றி சொல்லுவதை தவிர

இதனால் தான் பிடிக்கும் என்ற காரணமே இல்லாமல் பிடித்தது, உன்னை மட்டும் தான்!

நீ என்னை விட்டு விலக நினைக்கும் அந்த நொடிக்கு முன் நீ நினைத்து பார்க்க முடியாத தூரத்திற்கு நான் சென்றிருப்பேன். ..

புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை .

நேரம் இருந்தால் என்னை நினைத்து பார் நேரில் வரவில்லை என்றாலும் நினைவில் வருவேன் என் அன்பே ..!

நீ நிலவும் இல்லை நட்சத்திரமும் இல்லை. இவைகளை எல்லாம் அள்ளி சூடிக்கொள்ளும் வானம் நீ...!!!!!

சிறுசிறு சண்டைகள் காதலின் அம்சம் பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும் ❤️

தோற்றுத்தான் போகின்றது என் பிடிவாதம் உன் அன்பின் முன் 💓

உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது...

சின்னச்சின்ன ஊடல்கள் உன்னை பிரிவதற்கல்ல நம் காதலை வளர்ப்பதற்கு

விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்....உன் பார்வை பிடியிலிருந்து

கரைசேர துடுப்பிருந்தும் கரையேறும் எண்ணமில்லை நிலவொளியில்...உன் நினைவுகள் நிறைந்திருப்பதால்

நீ மௌனமாகும் போதெல்லாம் என் கவிதைகளும் கண்ணீர் வடிக்கின்றது...

விழிகளுக்குள் நீயிருக்கும் வரை என் கனவுகளும் தொடரும்...

சிறை வாழ்க்கையும் பிடிக்கும் அது உன் இதயமென்றால்

கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரையிலாம்..... உன் விழிக்கவிதையின் அர்த்தம் புரிந்தபின்னே நான் சுவைக்கவே ஆரம்பித்தேன்.

தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை

கண்களுக்குள் என்னவர் கனவே கலையாதே.

தொலை(ந்த)த்தஒன்று உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்...

என்னவரின் அன்பில் எல்லையற்ற மகிழ்ச்சியில் நான்.......

மனக்கடலில் நீ குதிக்க மூழ்கிப்போனேன் நான்.

சூடாக நீ தந்த ஒரு கப் காப்பி இதமாகவே இருந்தது உன் அன்பில்.

உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை.

பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்... இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்.

குளிர் காலத்தில் நான் வாடினால் உன் பார்வைதான் என் போர்வையோ.

சுத்தமாய் என்னை மறந்து போனேன் மொத்தமாய் நீ அள்ளும் போது.

கண்களில் கைதாக்கி இதயத்தில் சிறைவைத்து உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய்

எனக்கு இன்னொரு தாய்மடி நீயடா...

சந்தோஷமாய் பறக்கின்றேன் சிறகுகளாய் நீ இருப்பதால்

மார்கழி குளிரும் இதமான வெப்பமானது உன் நினைவுபுள்ளியில் கோலத்தை ஆரம்பித்தபோது

இதயம் என்ன போர்க்களமா... உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே...

என்னவனுக்குள் தொலைந்த நொடியிலிருந்து தினமும் எனக்கு காதலர் தினமே

காதல் சிலருக்கு கண்ணீரின் காவியம் பலருக்கு அழகிய ஓவியம்

கட்டிலறையோடு முடிவதல்ல காதல் கல்லறைவரை தொடர்வதே காதல்

ஆசை ஊற்றெடுக்கும் போதெல்லாம் அணைபோடுகிறது நாணம்.......

தழுவிச் செல்லும் காற்றிலும் உன் நினைவுகளே கூந்தலை கலைத்துச் செல்கையில்...

புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை...

அன்பெனும் மாளிகையில் அழியாத பொக்கிஷம் நம் அழகிய நிகழ்வுகள்

என்ன மாயம் செய்தாய் உனக்கெழுதும் வரிகளெல்லாம் மாயமாக மறைகிறதே

ஆயுளின் காலம் எதுவரையென்று தெரியாது .... ஆனால் உனதன்பிருக்கும்வரை என் ஆயுளிருக்கும்...

ஆவிழி பார்த்து பேசு என்கிறாய் உன் விழி நோக்க மொழிகளும் மறந்து போகிறது...

உன் நினைவுத்... தென்றலில் நானுமோர் ஊஞ்சலாகின்றேன்

புயலைவிட வேகமாக தாக்குகிறது உன் பார்வை..... கொஞ்சம் தாழ்த்திக்கொள் நான் நிலையாக நிற்க....

பிடிவாதத்தில் ஜெயிப்பதைவிட உன் அன்பிடம் தோற்பதையே விரும்புகிறேன்.

தனிமையை இனிமையாக்க உன் நினைவுகளால் மட்டுமே முடியும்...

மேகங்கள் சூழ்ந்த நிலவாய் நான் காற்றாகி ஒளித்தந்தாய் நீ

என்னை அழவைத்து அழகு பார்ப்பதும் நீ தான்... அருகில் வைத்து அரவணைப்பதும் நீயே தான்.....

தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை... உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது...

பாசம் காட்ட பல உறவுகள் இருந்தாலும்..... மனம் களைப்பாகும் போது இளைப்பாற தேடுவது உன்னையே

தேய்பிறை நிலவுக்கு தான் உன் நினைவுக்கு அல்ல...

உனக்காகவே என் வாழ்க்கை என்று நீ சொன்னபோது தான் என்னை எனக்கே பிடித்தது...

உன்னருகில் மௌனமும் ஓர் அழகிய கவிதை தான்...

உன் பார்வையென்ன மருதாணியா பட்டதும் சிவக்கின்றதே முகம்

கவிதைக்கு வரிகள் கேட்டேன்........ உன்னிதழின் வரிகளைவிட அழகிய வரிகளில்லை என்றான்

புகையும் உன் நினைவில் புதைந்து கொண்டிருக்கின்றேன்

உணர்வற்ற கவிதைக்கும் உயிர் வருகிறது நீ ரசிக்கும் போது

சொல்லாமல் கொள்ளாமல் தழுவிச்செல்லும் தென்றலைப்போல் மனதை வருடிச்செல்கிறது உன் நினைவுகள்.

எழுதவில்லை செதுக்குகிறேன் உனக்கான கவிதையை என் இதயத்தில்

உன் தேடல் நானென்றால் தொலைவதும் ஒரு சுகமே

விழிகளை திறந்தால் நாணம் தடைபோடுமென்று விழிமூடி கொள்கிறேன் உன் இதழோடு பேச

உன் விழிகளை நோக்கும் போது கண்களுக்குள் என்னை காண்பதைபோல்.....உன் மனதிலும் நானேயிருப்பேன் என்ற எண்ணமே நம் வாழ்க்கையை அழகாக்குகின்றது

மரக்கிளையில் சாய்ந்தேன் உன் நினைவுகள் துளிர்விட்டது

உன் தொடரலே என் உலகத்தை அழகாக்குகின்றது

பூவுக்குள்ளும் பூத்திருக்கின்றது உன் காதல் வாசனை

எழுதவில்லை செதுக்குகிறேன் உனக்கான கவிதையை என் இதயத்தில்

என்னைப்பற்றிய கவலைகள் எனக்கில்லை அக்கறைக்கொள்ள நீயிருப்பதால்......

கடற்கரையில் கால் பதித்தேன் உன் நினைவுகளும் ஒட்டிக்கொண்டது...

காவலன் நீயானாய் கைதி நானானேன்

தள்ளாடிப் போகின்றேன்..... தென்றலில் தள்ளாடும் கூந்தலைப்போல் உன் கரம் கன்னத்தில்பட

காதலின் பிடியில் சிக்கித் தவித்த மலருக்கும் ஆசை வந்தது மரணிக்காமல் வாழ......

சிறு ஊடல் ஒரு காத்திருப்பில் வளர்கிறது காதல்

மின்னலாய் நீ வர மழைச்சாரல் மனதுக்குள் காதல்

முடியாத பயணம் நான் தொடர வேண்டும் உன் கரம் பிடித்து...்

வெறுமையான வாழ்க்கையும் வசந்தகாலமானது உன்னால்....

கடவுளை அழைத்தேன் காட்சித் தரவில்லை என்னவரை நினைத்தேன் கண்ணெதிரே தோன்றினார்

மொத்தமாய் உன் அன்பு என்னை ஆதிக்கம் செய்ய சுத்தமாய் மாறிப்போனேன்நானும்

மேலும் பார்க்க
kadhal kavithai in tamil | Love quotes

நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம், ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!

Tamil kadhal kavithai | True love quotes

நீ என்னோடு பேசுகின்ற நிமிடங்கள் குறைந்து போனாலும்... நான் உன்னை பற்றி மனதில் நினைக்காத நிமிடங்களே இல்லை... என் இதயம் உன்னை தேடுகிறது!

kadhal kavithai in tamil | Best love quotes in tamil

இரவில் தெரியும் நிலவை விட என் மனதில் தெரியும் அவளின் முகமே என்றென்றும் அழகு !

Love quotes in tamil | Tamil kadhal kavithai

என்ன இவள் என்று நினைக்கும் காதலனை விட என்னவள் என்று உரிமை கொண்டாடும் கணவன் அழகு தான் !

True love quotes in tamil

அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட பிடித்தவர்கள் தான் அழகாய் தெரிகிறார்கள் என்பதே உண்மை...

மேலும் பார்க்க

நீ கட்டளையிடாமலேயே கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன் உன் அன்பில்

உன்னோடு வாழ்ந்த நாட்களை விட உன் நினைவுகளோடு வாழ்ந்த நாட்களை அதிகம் ..!

விடிந்த பின்பும் உறங்கிகிடக்குறேன் விழிமூடாமல் உன் நினைவில் ..

உனக்காக எதையும் இழந்து விடுவேன் எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன்..

உன் மீதான காதல் நீ இருக்கும் வரையல்ல, நான் இறக்கும் வரை தொடரும்!

விழிகளும் சுமை தான் மனதிற்கு பிடித்தவர்களை காண முடியாத போது ...

இடைவெளிவிட்டு நாமிருந்தாலும் இதயங்கள் இணைந்தே பயணிக்கின்றது

நீயே கேட்டாலும் விட்டு கொடுப்பதாக இல்லை, உன் மீதான என் காதலை .

நீ கட்டளையிடாமலேயே கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன் உன் அன்பில்...

என்ன இவள் என்று நினைக்கும் காதலனை விட என்னவள் என்று உரிமை கொண்டாடும் கணவன் அழகு தான்!

உன் காதல் என்ற ஒன்று மட்டும் எனக்காக இருந்தால் போதும், என் வாழ்வின் மூச்சு உயிர் உள்ளவரை உனக்காகவே இருக்கும்..

அருகில் இருந்தால் அணைத்து மகிழ்வேன் தொலைவில் இருப்பதால் நினைத்து மகிழ்கிறேன்..!

உன்னோடு சேர்ந்தே இந்த உலகை ரசித்திட ஆசை. உன் பூ கரம் பிடித்தே இந்த உலகை சுற்றிட ஆசை. உன் இன் முகம் பார்த்தே அந்த நிலவை ரசித்திட ஆசை. உன் மடி சாய்ந்தே என்னை மறந்திட ஆசை!

பிடிவாதம் என்பது காதலுக்கே உரித்தான குணமே. எவ்வளவு தடைகளை பார்த்தாலும் நேசித்த இதயம் என்றுமே அனைத்தையும் கடந்து காதலை நிஜமாய் ஜெயிக்குமே..

ஆயிரம் சண்டைகள் உன்னோடு நான் போட்டாலும்... நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்பதே உண்மை...

மீண்டும்...ஒரு ஜென்மம் இருப்பது...நிஜம் என்றால் அதிலும்... நீயே... வேண்டும் உறவாக...அல்ல உயிராக...

என் உணர்வும் என் இதயமும் உன்னிடத்தில் ஒருவழிப் பாதையில் நீ வழித்துணையாக வருவாயென..

உனக்காக காத்திருக்கும் ஏன் இதயம் வரும் வரை அல்ல நான் இறக்கும் வரை காத்திருக்கும்..!

கண்களுக்கு அருகில் இருப்பதை விட இதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல்!

என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும். இல்லையெனில், உன் அன்பு உள்ளவரை மட்டும் என் ஆயுள் போதும்..!!

காதல் கவிதைகள் (Kadhal kavithaigal)

Kadhal Kavithaigal

காதல் கவிதைகள் ( Kadhal Kavithaigal ) மனதிற்கு ஒரு இதமான வருடலை கொடுக்க கூடியவை. காதலை விரும்பாத உயிர்கள் இவ்வுலகில் இல்லை என்றும் சொல்லலாம். காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. பல பரிமாணங்களில் உலாவி வருவது. உண்மை காதலை உணர்ந்தவருக்கு அது உயிரானது. மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உரிமையானது. காதலை உணராமல் வெறுப்பவர்களுக்கு அது பொய்யானது. ஒரு தலை காதலாக இருப்பவர்களுக்கு அது புதிரானது. காதலே செய்யாமல் வாழ்பவர்களுக்கு அது விசித்திரமானது. காதலை ஆராய்பவர்களுக்கு அது வினோதமானது. எப்படி இருந்தாலும் காதல் வாழ்வானது சாகும் வரை அள்ள அள்ள குறையாமல் அளந்து கொண்டே போகும் அளவில்லாதது.

ஒவ்வொரு காதல் நினைவும் விசேஷமானதுதான்... அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும், அந்த உணர்வை காதலியிடம் அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட சந்தோஷம், பதட்டம், உணர்ச்சிப் பிரவாகம்.. மறக்க முடியாத பசுமையான நினைவுகள். ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் தங்களுடைய காதலை வெளிப்படுத்துகின்றனர். ஆரம்ப காலத்தில் தமிழில் காதல் வாழ்த்துக்களை அனுப்புவோம். இப்போது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காதல் மேற்கோள்களுடன் ஒரு படத்தை உருவாக்கி அதை அனுப்புவதன் மூலம் நம் அன்பை வெளிப்படுத்தலாம். காதல் கவிதைகள் ( Kadhal Kavithaigal) என்பது காதலை வெளிப்படுத்த மிகவும் அழகான மற்றும் மிகவும் சுவாரஸ்யமான வழியாகும். காதலின் வெவ்வேறு உணர்வுகளை எளிய நடையில் எழுதிய காதல் கவிதைகள் ( Kadhal Kavithaigal) தொகுப்புகளை உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.