தனிமை கவிதைகள்
வாழ்க்கை கற்று கொடுக்கும் இந்த விலைமதிப்பு மிக்க பாடத்தின் இறுதியில் நாம் தேடி அலைவது நிம்மதியையே விரும்புவது தனிமையையே.
Alone Quotes in Tamil
சில பேருக்கு தனிமை என்பது வரம். அதுவே சில பேருக்கு தனிமை என்பது சாபம். சிலர் தங்களைச் சுற்றி நிறைய மக்கள் இருந்தும் தாங்கள் தனிமையாக இருப்பதாகவே உணர்வார்கள். காரணம் அவர்கள் மனம் தனியாக செயல்படுவது தான். தனியாக இருப்பதற்கும், தனிமையில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தனிமை என்பது அழகானது, அது சில நேரங்களில் தேவையானதும் கூட என்று சில பேர் சொல்ல நாம் கேட்டிருப்போம். தனிமை ஓர் சிறந்த நண்பன். உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுகிறது தனிமை. நீங்கள் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி கவனச் சிதறல்கள் இன்றி உழைக்க தனிமை ஊக்கம் அளிக்கிறது இந்தப் பதிவில் நீங்கள் தனிமையில் இருந்தபோது வந்த நினைவுகளை நினைவு படுத்தும் வகையில் தனிமை கவிதைகளை ( Alone Quotes in Tamil ) காணப்போகிறோம்.
சில உறவுகள் நம்மை காயப்படுத்திய போதும் நம்மை ஆறுதல் படுத்தும் ஒரே ஒரு உறவு தனிமை.
அனைவரும் இருந்தும் நீ அனாதை போல உணருகிறாய் என்றால் உன் உண்மையான அன்பை யாரிடத்திலோ இழந்து இருக்கிறாய் என்று அர்த்தம்.
தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை.
உறவுகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள.. என் உயிர் நட்பாக ஒட்டிக்கொண்டது தனிமை..
நல்ல பாடங்கள் கற்றுத் தருவது வாழ்க்கையாம்! அந்த வாழ்க்கைக்கு நல்ல பாடங்கள் கற்று தருவது என் தனிமை!
"தனிமை" எதை புரிய வைத்ததோ இல்லையோ இவ்வளவு காலம் மிக பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறோம் என்பதை புரிய வைத்தது.
இயற்கையின் மறுவடிவமே, தனிமை! இயற்கையை ரசிக்காத மனிதனும் இல்லை, தனிமையில் வாழாத மனிதனும் இல்லை!
நிம்மதியை இழந்து தனிமையை சந்தித்தேன்! தனிமை சிரித்தது இது தான் வாழ்க்கை என்று! இது தான் அனுபவம் என்று!
பேச யாரும் இல்லை என்பதை விட பேசுவதைக் கேட்க யாருமில்லை என்பது தான் தனிமையின் கொடூரம்.
தனிமை என்பது வலி என்று யார் சொன்னது? தனிமை என்பது வழி.. நம்மை பற்றி நமக்கே புரிய வைக்கும் நிலை..
பல கஷ்டங்களை கண்டு மரத்துப் போன என் இதயத்திற்கு தனிமையே போதுமானதாக இருக்கின்றது.
யாருமற்ற தனிமையான பொழுதுகள் தான், எல்லாரை பற்றியும் புரியவைக்கிறது!
உன்னைக் காதலித்தேன், தனிமை கஷ்டமாக இருந்தது! இப்போ, தனிமையை காதலிக்கிறேன் உன்னை வெறுத்து!
உரிமையோடு சிலரை உறவென்று நினைத்ததை தவறென்று புரிந்தது மீண்டும் தனிமையே போதும் என்று விலகி விட்டேன்.
கருவறையில் இருந்த அமைதியான சூழலையும் மன உறுதியையும் திரும்பவும் மீட்டுத் தந்தது என் தனிமை.
என் வாழ்க்கை தரத்தை யாரும் தொட முடியாத உயரத்தில் என்னை பறக்க வைத்தது என் தனிமை தான்.
தனித்து நிற்கும் போது தான் தெரிகிறது..! தனிமை மட்டும் தான் நிஜம் என்று..
ஒரு போலியான உறவை நேசித்து நாமே நம் மனதை காயபடுத்தி கொள்வதை விட தனிமை மேலானது!!
அன்பானவர்களுக்காக இறங்கி போவதும் தவறில்லை .. நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை ..!
தேடிச் சென்று அன்பை நிரூபிக்க நினைக்காதே.. ஆசையாய் போனால் அவமானம் தான் மிஞ்சும்..!
உனக்காக யாரும் இல்லை என்று கவலைப்படாதே பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான்
பேச நேரம் இல்லை என்றால் நம்பாதீர்கள்...!!! அவர்களின் முன்னுரிமை பட்டியலில் 'நீங்கள் இல்லை என்பதே உண்மை ..!
வெற்றியோ தோல்வியோ எதையும் சமாளிக்கும் மன உறுதியை தந்தது என் தனிமை உலகம்.
விரும்பும் போது தெரியவில்லை எனக்கு இப்படி வலிகளையும் வேதனைகளையும் வலிமையாக தந்துவிட்டு போவாய் என்று.
தனிமையை உணர்வதற்கு யாருடைய பிரிவும் தேவை இல்லை உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத உறவுகள் போதும்.
தனிமை என்பதே இல்லை என் வாழ்வில், நீங்காத உன் நினைவு என் நெஞ்சோடு இருக்கும் வரை!
உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகளுடன் தனிமை என்னைக் கொல்கிறது! என் தனிமையை உன் மனம் அறியுமோ?
தடை செய்ய யாருமில்லாமல் தடுத்து நிறுத்த தடைகள் இல்லாமல் தனித்து நின்று சாதித்திடும் போது தனிமைகள் என்றும் சுகந்திரமானவை
ஒளி வந்தால் நிழல் கூட விலகிவிடும். உலகில் தனிமையே நிலையானது. ஒளியை நம்பும் இருளாக வாழாதே!
பார்க்கின்ற உலகம் யாவும் மெய்யானவை அல்ல எல்லாம் பொய்யானவை என உணர்த்தியது என் தனிமை உலகம்.
உணர்வுகள் என்றும் அழியாதது, ஆனால் சிலரிடத்தில் அது மறைகிறது, அங்ஙனம் அனைவரும் தஞ்சமிடும் ஒரே இடம் தனிமை மட்டுமே.
தவறியதை எல்லாம் தவறாமல் நினைவுபடுத்துகிறது தனிமை...
தனிமை கூட ஒருவருக்கு துணையாகும் என்பதை உணர்தேன்.. நீ என்னை பிரிந்து சென்ற கணம் முதல்.
தனிமை என்னும் காட்டில் ஆயிரம் மிருகங்கள் என்னை வேட்டையாடுகிறது..!
தனிமையை நினைத்து கவலை கொள்ளாதே..! தனிமைதான் உலகத்தையும் வாழ்க்கையையும் புரிய வைக்கும்..!
வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை தனிமை..!
அழுகையாலும் வார்த்தைகளாலும் தீராத வலியை தீர்த்து வைக்கிறது தனிமையும் மௌனமும்...
தனிமையில் நான் இருந்தாலும், உன் நினைவு மட்டும் என்னைப் பின் தொடர்கிறதே, சொல்லாத ரகசியத்தை சொல்லிச் செல்கிறதே!
நீ இல்லா நிலையிலும் உன் நினைவலைகளில் தாமரைபோல் மலர்த்திருக்கிறேன்..!!
ஒருவருடைய நினைவுகள் மனதில் நிலையாகி போனதால் தனிமை வாழ்வில் நிலையாகி போனது..!
ஒளி வந்தால் நிழல் கூட விலகிவிடும். உலகில் தனிமையே நிலையானது. ஒளியை நம்பும் இருளாக வாழாதே!
என் தனிமைக்கு முற்றுப்புள்ளி வை! இல்லையென்றால் என் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்!
நீண்ட போராட்டம் பின்பு தான் உணர்ந்தேன். இந்த பிறவியில் நான் என்றும் தனிமை மட்டும் கொண்ட வேந்தனாக வாழ வேண்டும் என...
தனிமை ஒன்றும் வெறுமை அல்ல விரும்பியவருக்காக காத்திருக்கையில்..
முதுமையில் வரும் தனிமையை, இளமையிலே அனுபவித்து விட்டேன். மீண்டும் வராது என்ற நம்பிக்கையில்.
அன்று நீ பேசினாய் மணிக் கணக்காய்! இன்று உன் மௌனம் பேசுகிறது, நாள் கணக்காய்!
தனிமையில் நான் உன்னை நினைக்க விரும்பவில்லை, உன்னை நினைப்பதற்காகவே தனிமையை நான் விரும்புகிறேன்
தனிமையில் தவிக்கும் மனதிற்கு மருந்தாக சில நினைகள்.!!
வெறுக்கும் வாழ்க்கையை விரும்ப வைப்பது தனிமை தரும் பலமே....
தனிமை எனக்கு பிடிக்கும் காரணம் என் மனதை காயப்படுத்த அங்கே யாரும் இருப்பதில்லை...
தனிமை அழகானது உன்னிடமே உனக்காய் நீ தக்கவைத்து கொள்வதில்!
தனித்து நிற்கும் போதுதான் தெரிகிறது...! தனிமை மட்டும் தான் நிஜம் என்று..!
ஆயிரம் பேர் சூழ்ந்து நின்றாலும் மனதில் தனிமை வாட்டினால் அது மரணத்திலும் கொடுமையானது..!
நிம்மதியை இழந்து தனிமையை சந்தித்தேன்! தனிமை சிரித்தது இது தான் வாழ்க்கை என்று! இது தான் அனுபவம் என்று!
Alone Quotes in Tamil
Alone Quotes in Tamil | தனிமை என்பது அழகானது, அது சில நேரங்களில் தேவையானதும் கூட என்று சில பேர் சொல்ல நாம் கேட்டிருப்போம். அது தனிமை அல்ல, அமைதி. தனிமை என்பது ஒரு உணர்ச்சி. ஒரு கோபத்தை போல, ஒரு மகிழ்ச்சியை போல, ஒரு துக்கத்தை போல அதுவும் ஒரு உணர்ச்சி அவ்வளவே. நமது சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறும்போது, நம்மை நோக்கி ஆறுதலாய் ஒரு கரம் நீளும் போது, நம்மை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்ளும்போது, நமக்கான கவனத்தை ஒருவர் கொடுக்கும்போது நீரில் கரையும் பனிக்கட்டி போல தனிமை கரைந்து விடும். ஆனால் அதுவரை நாம் உயிர்ப்போடு இருக்க வேண்டும். தனிமையில் இருந்து நாம் மீண்டு வர நமக்கு யாராவது ஒருவர் தேவைப்படுவதை போல நாமும் நம்மை சார்ந்தவர்களுக்கு தேவைப்படுவோம், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை சுற்றியுள்ளவர்கள் தனிமையாய் உணரும்போது அதில் இருந்து அவர்களை மீட்டு கொண்டு வருவது அத்தனை முக்கியமானது.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு சூழலில் தனிமையை உணரலாம். அருகில் யாரும் இல்லாமல் இருக்கும்போது தனிமையை உணர்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. சில நேரங்களில் யாரும் நமக்கு அருகில் இல்லை என்றாலும்கூட மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க மொபைலில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று பல வழிகள் இருக்கும்போது நாமே வலிந்து நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வது நாம் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழவில்லை என்பதையே குறிக்கிறது. முதுமை, மனஅழுத்தம், நெருக்கமானவர்களின் பிரிவு என்று தனிமைக்கான காரணங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான் என்பதை நாம் எப்போதும் மறக்கக் கூடாது. வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் தனிமை கவிதைகளை ( Alone Quotes in Tamil ) இந்த பதிவில் காணலாம்.