நட்பு கவிதைகள்
நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கு வேளிச்சம் போட்டுகாட்டும் சிறந்த கருவிதான் நட்பு..!
Friendship Quotes in Tamil
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுவது நம்மை புரிந்து கொண்ட ஒரு நண்பன். பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் ஆழமான நட்பின் அன்பான கவிதைகளை (Friendship Quotes in Tamil) இந்த பதிவில் காணலாம். பள்ளிப் பருவம் முதலே தொடரும் நட்பு என்றாலும், இரயில் சிநேகமாய் வழித்தடங்களில் பூக்கும் நட்பு என்றாலும் நம் வாழ்வில் அவசியமான ஒரு உறவாக அது மாறிவிடுகிறது. நட்புறவுகள் பல்வேறு பருவங்களில் பல்வேறு சூழல்களில் ஏற்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் ஆழமான நட்பின் அன்பான கவிதைகளை (Friendship Quotes in Tamil) இந்த பதிவில் காணலாம்.
தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்!
ஒரு நல்ல தோழி மட்டும் இருந்தால் போதும் தோல்வியையும் துவட்டி போட்டு விடலாம்
நட்பு எப்போதுமே வித்தியாசமானது சில நேரங்களில் அழுத நாட்களை சிரிக்க வைக்கும் சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்.
சொந்தம் என்பது பனித்துளி போல நொடியில் மறைந்து போகும் ஆனால் நம் நட்பு என்பது ஆகாயம் போல என்றுமே நிலைத்து நிற்கும்.
தொலைதூரம் சென்று மறைந்தாலும் மனதை விட்டது என்றும் மறைவதில்லை பள்ளி நாட்களில் அரட்டை அடித்ததை.
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நண்பர்கள்!
நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும்.
உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன் ..
பழகும் முன் தனிமை பழகிய பின் இனிமை பிரிவு என்பதோ கொடுமை பிரிந்தபின் தான் தெரியும் நட்பின் அருமை!
நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கே வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த கருவி தான் நட்பு!
பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் இது காதல்! இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம் இது தான் நட்பு!
எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும் அதை உபயோகித்து கொள்ளாததில் இருக்கிறது நட்பின் அழகு!
சோகமான நேரம் கூட மாறிப்போகும்.. வலிகள் கூட தொலைந்து போகும்… நண்பர்கள் உடன் இருந்தால்..
நம்முடைய வாழ்க்கைக்காக கவலைப்படுகின்ற ஒரு நண்பன் கிடைப்பது நம் வாழ்வில் கிடைத்த வரம்
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எப்போதும் நம்மை விட்டு போகாத ஆண் பெண் நட்பு கண்டிப்பாக இருக்கும்
பணத்தை மட்டும் சேர்க்காமல் நண்பர்களையும் சேர் வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமென்றால்
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பது தான் நட்பு!
சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு..!
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்.... ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்...!
பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல... சில நேரங்களில் தட்டிகொடுப்பது தான் நட்பு!
நண்பர்களின் அன்பை விவரிக்க உணர்வுகள் போதும் வார்த்தைகள் தேவையற்றது
நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கு வேளிச்சம் போட்டுகாட்டும் சிறந்த கருவிதான் நட்பு..!
கடவுள் கொடுத்த வரமாக இருந்தாலும் கடவுளுக்கே கிடைக்காத வரம் இந்த நட்பு
உலகத்தில் காதலின் பிரிவை விட கொடுமையானது பல வருடங்கள் பழகிய நட்பின் பிரிவு
உங்கள் தவறை நியாயப்படுத்தும் நண்பனை விடவும் சுட்டிக்காட்டி திருத்தும் நண்பன் தான் சிறந்தவன்...
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது. ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தி விடும்.
உறவு என்பது ஊஞ்சல் மாதிரி அது சிலரை தாங்கும் சிலரை விழவைக்கும், நட்பு என்பது பூமி மாதிரி அது எல்லோரையும் தாங்கும்
காதலுக்கு எல்லைகள் உண்டு..! ஆனால் நட்பிற்கு எல்லைகள் கிடையாது..!
ஆயிரம் பேர் இருந்தாலும் நமக்கு தக்க சமயத்தில் தோள் கொடுப்பது நண்பன் தானே
நட்பே! முதல் உறையாடலில், கலைந்து போகும் மேகமென நினைத்த உன்னை இன்று, என்றும் நிலையான வானமாக பார்க்கிறேன் உன் அக்கறையான அன்பால்!
மனம் விட்டு பேச ஒரு நட்பு கிடைத்தால்.... அதுவும் தாய் மடி தான்...!
நட்பு மேகம் அல்ல கலைவதற்கு. இது அன்னையின் அரவணைப்பு.
பழகிய பின் இனிமை பிரிவு என்பது கொடுமை பிரிந்தால் தான் தெரியும் நட்பின் அருமை..!
எங்கோ பிறந்து இதயத்தில் இணைந்து வாழ்வில் பயணிக்கும் உன்னத உறவு மட்டுமே!
உன் வாழ்க்ககையில் விலைமதிப்பற்றது நண்பர்கள் மட்டுமே....
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்..... ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்..!
உன் வாழ்க்ககையில் விலைமதிப்பற்றது நண்பர்கள் மட்டுமே....
நண்பர்களின் அன்பை விவரிக்க உணர்வுகள் போதும் வார்த்தைகள் தேவையற்றது
உண்மையான நட்பை அன்பு ஒன்றை தவிர வேறு எதை கொடுத்தாலும் வாங்க முடியாது
எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு..!
புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால்.. நண்பர்கள் என்ற கடிதம். உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்...
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்..... ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்..!
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பது தான் நட்பு!
சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு ..!
பழகும் முன் தனிமை... பழகிய பின் இனிமை... பிரிவு என்பதோ கொடுமை... பிரிந்த பின் தான் தெரியும் நட்பின் அருமை...
எதையும் செய்யக் கூடிய நட்பு கிடைத்தும், அதை உபயோகித்துக் J கொள்ளாததில் இருக்கிறது நட்பின் அழகு..!
தினம் திட்டும் மற்றவர்களின் வார்த்தைகளை விட திட்டாமல் நகரும் நண்பனின் மெளனம் கொடியது..!
அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம். உறவுகளுக்கு மேலே, உயிர் ஆனோம். காலம் கடந்து சென்றாலும் கடைசி வரை தொடர வேண்டும் நம் நட்பு.
ஆயிரம் உறவுகள் மண்ணில் இருந்தாலும் வாழ்க்கைக்கு அழகு உன் நட்பு மட்டும் தான்..!
உறவுமுறை தெரியாமல்.. முகவரி அறியாமல்.. ஒருவர் மேல் நாம் வைக்கும்.. நம்பிக்கையின் பெயர் தான் நட்பு..!
Friendship Quotes in Tamil
நட்பு என்று சொன்னாலே அனைவருக்கும் பிடிக்கும் அதனால் தான் இந்த பதிவில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நட்பின் அழகான கவிதை( Friendship Quotes in Tamil ) வரிகளை உங்களிடம் அர்ப்பணித்துள்ளோம். தேர்ந்தெடுக்கும் நிறம் உன் குணம் காட்டும். ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும். உன்னை யாரென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உன் நண்பனை அடையாளம் காட்டு என்பார்கள். அந்தளவு நட்பு புனிதமானது வலிமையானது ஆத்மார்த்தமானது. மழை நீர் போல இயற்கையிலேயே சுத்தமானது. பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான். வீட்டுக்கு எல்லை உண்டு, ஊருக்கு எல்லை உண்டு, நாட்டுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது. ஒரே பள்ளியில் படித்தவர்கள், ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஒரே பேருந்து, ஒரே ரயிலில் பயணம் செய்பவர்கள், ஒரே டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள் என பல்வேறு நிலைகளில் நட்பு உருவாகலாம். ''கண்கள் அழுதால் துடைப்பது கைத்துண்டு, இருதயம் அழுதால் துடைப்பது நட்பு,'' அந்தளவு நட்பு உயர்வானது.
உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது என பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். உண்மையான நட்பின் முன் தமது உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது மனதில் ஏற்படும் அமைதியை அளவிட முடியாது. துன்பம் வரும் வேளையில் கடவுளை நினைக்கிறோம். அடுத்ததாக உதவி கேட்க நல்ல நண்பர்களைப் பற்றிய எண்ணம் நம்மையும் அறியாமல் நம் மனதில் உதயமாகிறது. பரஸ்பரம் அன்பை மட்டும் அல்லாமல் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆற்றல் நட்புக்கு மட்டுமே உரிய சிறப்பாகிறது. நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். தீயநட்பு தேய்பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து பின்னர் மறைந்து போகும். எனவே நல்ல நட்பை நேசிப்போம்! நல்ல நட்பை வாசிப்போம்!! நல்ல நட்பையே சுவாசிப்போம்!!! தமிழ் நட்பு கவிதைகளை ( Friendship Quotes in Tamil ) உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்