சோக கவிதைகள்
மகிழ்ச்சியும் துக்கமும் நம் வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கம். வாழ்வில் ஒவ்வொருநாளும் பல சோகங்களை நாம் அனுபவிக்க நேரிடுகிறது.
Sad Quotes in Tamil
வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள், மகிழ்ச்சி மற்றும் சோகம், இருள் மற்றும் ஒளி இருக்கும். அனைத்தும் எதிர் தளத்தில் உள்ளது. சோகமான விஷயங்களும் நடக்கும், ஆனால் அவை நீண்ட காலம் நீடிக்காது. சோகமான சம்பவத்தை நினைத்து மன அழுத்தத்தை அடைய வேண்டாம். நடக்கும் எல்லாவற்றுக்கு ஒரு காரணமுண்டு. அது நல்ல காரணமாக இருக்கும் என்று நம்புவோம் . இந்த பதிவில் அணுவில் ஆயிரம் வலிகளை சுமந்து அதையும் தாண்டி வாழ்க்கையில் எதையோ யாரையோ சமாளிக்கவும் சகித்துக்கொள்ளவும் சிரித்துக் கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் சிரிப்பிற்கு பின்னால் உள்ள வலிகளை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே பிரதானமாக எடுக்கொள்ளப்பட்டுள்ளது. இங்கே சோக கவிதைகள் ( Sad Quotes in Tamil ), காதல் தோல்வி, துரோகம், வெறுப்பு, போன்ற சோக உணர்ச்சிகளைப்பற்றி பேசுகின்றன.
நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...
உறக்கம் தொலைந்த இரவுகளில் உறங்கிய நினைவுகள் விழித்துக்கொ(ல்)ள்கிறது...
பசித்தவருக்கு தெரியும் உணவின் அருமை... இழந்தவருக்கு புரியும் உறவின் அருமை....
சிரித்த நிமிடங்களை விட, அழுத நிமிடங்களே... என்றும் மனதை விட்டு நீங்குவதில்லை....
சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...
பிறரிடம் பகிர முடியாத வேதனையைக் கூட ஆற்றிட விழிகள் உளற்றெடுக்கும் அருவி தான் கண்ணீர்
என் அதீத ஆசையெல்லாம், என் மனம் கஷ்டப்பட்டும் போது. என் வார்த்தையை கேட்க ஓர் துணை வேண்டும் என்பதே.
வெளியே சிரிப்பது தெரிந்தவர்களுக்கு. உள்ளே சிதைபட்டு சிறைபட்டு கிடப்பது தெரியவில்லை ஏனோ...!
நினைக்கும் பொழுது இறககும் வரம் எல்லோருக்கும் கிடைத்தால் இங்கு யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்
என்னை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு புரிந்து கொள்ள மறுபவர்களுக்கும் மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
யாரும் எனக்காக இல்லை என்பதை விட யாருக்கும் நான் பாரமாக இல்லை என்பதே உண்மை.
தனிமை எனக்கு மிக பிடிக்கும் ஏனென்றால் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை என்பதால்.
என்னை பிரிய உன் மனம் உடன் பட்டதை எண்ணுகையில் விழிகள் கண்ணீரால் கரைகின்றன.
தனிமை கொஞ்சம் வித்தியாசமானது நாமே எடுத்து கொண்டால் இனிக்கும் மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் கசக்கும்.
நேசிக்க யாரும் கற்றுக் கொள்வதில்லை ஆனால் ஒருவரை நேசித்த பின்பு நிறைய கற்றுக் கொள்கிறார்கள்
ஒருவர் நம்மோடு பேசும் நேரம் குறைகிறது என்றால் அவர் நம் மீது வைத்துள்ள அன்பு குறைகிறது என்றே அர்த்தம்
பேச விரும்பாத உன்னோடு தான் அடிக்கடி பேசத் துடிக்கிறது என் இதயம் 'பாவம் அதற்கு தெரியாது நான் உனக்கு சுமை என்று...!
தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாகவே இருந்து விடலாம் நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.
நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்... இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் ஆழமாக யோசிக்க தோன்றும்...!!
நினைத்தது போல் எல்லாம் நடந்தது... ஆனால் கனவு போல், எல்லம் ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது.!
எதிர் பார்க்கும் போது எதிர்பார்த்தவர்கள் பேசவில்லை என்றால் அதிகமாகவே வலிக்கிறது
தனித்து நிற்கும் போதுதான் தெரிகிறது...! தனிமை மட்டும் தான் நிஜம் என்று..!!
எல்லாம் கொஞ்ச காலம் தான் உயிரானாலும் சரி உறவானாலும் சரி
வாழ்க்கையில் சோகங்கள் வரலாம் தான் ஆனால் சோகங்களே வாழ்க்கையாகி விட கூடாது
தேடி வரும் அன்பை தவற விட்டால் தேவைப்படும் போது தேடினாலும் கிடைப்பது இல்லை
புரிந்தும் புரியாமல் நடிப்பவர்களுக்கு எப்படி சொல்லியும் ஒன்றையும் புரிய வைக்க முடியாது
காயப்பட்டாலும் சரி, காயப்படுத்தினாலும் சரி, கலங்குவது என்னவோ கண்கள் தான்!
புரிந்து கொண்டதை விட, தவறாக புரிந்து கொண்டது தான் வேதனையில் மிக சிறந்த வேதனை!
தனிமையைவிட, கொடிது உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளோடு, நீ இன்றி வாழ்வதுதான்!
புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லை புன்னகைப்பதே மறந்துவிடுகிறது சிலருக்கு …
வாழ்வினில் உண்மையை நிரூபிக்கும் அதிர்வுகளில் துன்பமும் ஒன்று.
துக்கத்தை விட கொடியது உங்கள் வலியை யாரும் புரிந்து கொள்ளாமல் இருப்பது.
நான் பிறரால் காயபட்டதை விட பிடித்தவர்களால் காயபட்டதே அதிகம்..
வாழவேண்டும் என்ற ஆசையே வரமறுக்கிறது... வரம்புகளற்ற சில வார்த்தைகளால்...
பிறர் வலியை புரிந்து கொள்ள முடியும் என்னால் என்னுடைய வலியை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை...
தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாகவே இருதுவிடலாம் நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.
அன்பில் ஏது கலப்படம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் பலர் உணர்த்தி வீட்டு சென்று விட்டனர். அன்றிலும் கலப்படம் உண்டு என்று.
விதியே..? ஒரு நாளாவது என்னை நிம்மதியாக உறங்க வை... அது என் மரணமாக இருந்தாலும் பரவாயில்லை...!!
நம் அன்பை பற்றி நினைத்து பார்க்ககூட நேரமில்லாதவர்களைத் தான் நாம் துரத்தி துரத்தி நேசிக்கிறோம்..
பேச விரும்பாத உன்னோடு தான் அடிக்கடி பேசத் துடிக்கிறது என் இதயம் பாவம் அதற்கு தெரியாது நான் உனக்கு சுமை என்று...!
ஒருவரை வாழ்நாள் முழுவதும் அழ வைக்க கடவுள் எடுக்கும் ஆயுதம் பொருத்தமில்லாத வாழ்க்கை துணை
என்னோட வலிகளை என்னை தவிர வேறு யாராலும் உணர முடியாது!
Sad Quotes in Tamil
சோகம் என்பது மகிழ்ச்சியற்ற, துயரம் அல்லது துக்கம் கொண்ட ஒரு அனுபவமாகும். தற்போதைய சூழலில் நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. எனினும் அதே சமயத்தில், இதன் விளைவாக மக்களுக்கு சோகம் அல்லது கவலை அதிகரிக்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களால் கவலைப்படுகின்றனர். மாணவர்கள் பரிட்சையை நினைத்து கவலைப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் அவரவர் பணியை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற கவலையின் காரணமாக நிலையான மன அழுத்தத்தைக் கொண்டுள்ளனர். குடும்பத்தில் உண்டாகும் குழப்பங்கள் மற்றும் சிக்கல்களினாலும் கவலையின் அறிகுறிகள் தோன்றுகிறது. மனித வாழ்க்கையை பொருத்தமட்டில் மகிழ்ச்சியும் சோகம் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக கருதப்படுகிறது. இந்தப் பதிவில் சோக உணர்ச்சிகளைப்பற்றிய கவிதை ( Sad Quotes in Tamil ) தொகுப்பினை கொடுத்துள்ளோம்.
வாழ்க்கையாகிய மணலில் சோகம் பலமாக மிதித்து நடப்பதால், அதன் தடங்கள் பதிந்துவிடுகின்றன. அவைகளைக் காலத்தால் அழிக்க முடிவதில்லை. என்னதான் நம்முடன் நிறைய மனிதர்கள் சொந்தக்காரன்,நண்பன் என்ற பேர்களில் இருந்தாலும் நவீன இந்த காலத்தில் நம்முடைய வலிகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை எல்லோரும் தனிமரமாகி போய்விட்டோம். சோகம் தான் வாழ்க்கை என்று எண்ணாதே... இதுவும் வாழ்க்கையில் ஒரு பாடம் என்று கற்றுக்கொள் வாழ்க்கை அழகாக மாறும். இந்த பதிவில் சோகம் பற்றிய வாழ்க்கை தத்துவம் கவிதைகளை ( Sad Quotes in Tamil ) எழுத்து மற்றும் IMAGES மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த படங்களை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள்.