அப்பா கவிதைகள்
இன்பத்தினை இருமடங்காக நம்முடன் பகிர்ந்து துன்பத்தினை மறைத்து வைத்து சிரித்திடுவார். அக்கறையும் பாதுகாப்பும் தருவதில் தந்தைக்கு நிகர் தந்தையை.
Appa Kavithai
வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்பதும், "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்பதும் அவ்வையின் வாக்கு. அப்பாவின் கண்ணீரைக் கண்டோரில்லை அப்பாவின் அன்பைக் கானதோரில்லை. பிள்ளைகளின் தூக்கத்தில் தந்தையின் அன்பு மறைந்திருக்கும். தன் குழந்தைகளைப் பற்றி பிறரிடம் பெருமையாக பேசி அளவில்லா மகிழ்ச்சி கொள்வார். அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம் கோடி ரூபாய்க்கும் ஈடாகாது. அப்பாவின் கரம் பிடித்து நடக்கையிலே, கவலைகள் அனைத்தும் மறந்து போகும். மரத்தை தாங்கிப் பிடிக்கும் வேர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை அதுபோலவே குடும்பத்தை தாங்கி பிடிக்கும் அப்பாவின் உழைப்பை பலரும் உணர்வதில்லை. அப்பாவின் அன்பையும் அக்கறையையும் நாம் உணர நீண்ட காலங்கள் எடுக்கின்றது. இந்த பதிவில் ஒவ்வொரு கவிதையும் அப்பாவின் ஒவ்வொரு பரிமாணத்தையும் பிரதிபலிப்பவை. அப்பா கவிதை (Appa Kavithai) தொகுப்பினை படித்து மகிழுங்கள்.
கையில் ஏந்தி, தோள்களில் சுமந்து, நீ காணா உயரங்களை நான் காண ஆவல் கொண்டாயே.! தன்னலம் இன்றி உமை யாவையும் எனக்கு அளித்து எதிர்பார்ப்புகளுக்கு எதிரி ஆனாயே! என் தோழனாகிய தந்தையே!
தரை மீது நம் பாதம்பட கூடாதென தோள் மீது நமை சுமந்து புது உலகை நமக்கு காட்டி நம்மை புத்தம் புதிதாய் ஆக்கியவர் அப்பா
கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..?
அவமானங்கள் பல சுமந்து தடைகள் பல கடந்து நம் வீட்டை கட்டிக் காக்து தன் குடும்பத்துக்காய் வாழும் ஒரு ஜீவன் அப்பா
பலரது வாழ்வில் கடைசி வரை விளங்கிக்கொள்ள முடியாத புத்தகம் அப்பா..!
நான் ரசித்த அழகிய இசை என் அப்பாவின் இதயத்துடிப்பு.
அப்பாவை தவிர நமக்கு நல்ல நடத்தையை வாழ்க்கையில் வேறு எந்த ஆசானாலும் கற்பிக்க முடியாது.
சில நேரம் பல வலிகளை மறக்க அப்பாவின் வார்த்தைகள் மட்டும் போதுமாக இருக்கின்றது.
கடவுளுக்கும் அப்பாவுக்கும் சிறு வேறுபாடுதான் உள்ளது கண்களுக்கு தெரியாமல் இருப்பது கடவுள், கண்களுக்கு தெரிந்தும் கடவுள் என புரிந்து கொள்ளப்படாதவர் தான் அப்பா.
பத்து மாதம் சுமந்த தெய்வம் அம்மா வாழ்க்கை முழுக்க சுமக்கும் தெய்வம் அப்பா.
தோல் மீதும் மார்பு மீதும் என்னை சாய்த்து என் வழிகளை எல்லாம் தாங்கி வழிகாட்டும் கலங்கரை விளக்காய் என் பாதைகள் முழுக்க வெளிச்சம் தந்தாயே அப்பா.
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தங்கிடும் ஒரே உயிர்!
ஆராய்ந்து பார்க்கும் வரை யாருக்கும் தெரியாது ஒவ்வொரு தந்தையின் கஷ்டத்தை!
அழகிய உறவாய் அன்பான துணையாய் உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும் ஒரே உறவு அப்பா!
அப்பாவின் தோழில் ஏறி சாமியை பார்க்கும் போது தெரியவில்லை சாமியின் தோள் மீது தான் ஏறி இருக்கிறேன் என்று!
அப்பாவின் கண்டிப்பில் கோவம் இருக்கிறதோ இல்லையோ அளவில்லாத பாசம் கண்டிப்பாக இருக்கும்
தாய்க்கு பின் தாரம் ஆனால் ஆனால் தந்தைக்கு பின் தந்தை மட்டுமே.. யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது.
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஓரே உயர் அப்பா!
கண்களில் கோபத்தையும் இதயத்தில் பாசத்தையும் வைக்கும் ஓரே உறவு... தந்தை மட்டுமே..
அம்மாவை கோபித்து உந்தன் மார்பினிலே முகத்தை புதைத்திட்டு ஓரக் கண்ணாலே உன்னைப் பார்த்த சிறு வயது இன்னுமே என் மனதில் திடமாக பதிந்து இருக்கிறது என் அப்பா
எந்த பெண்ணும் அவள் கணவணுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு இளவரசியாகவே இருக்கிறாள்..!
அப்பா எதனையோ சரிவுகளுக்குப் பிறகும், தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை ...!
தனக்கு கிடைக்காத அனைத்து சந்தோஷங்களும் தன் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்து வாழும் உயிர் தான் அப்பா
உலகில் நான் உயரும் போதல்லாம் எனக்கு கீழ் இருப்பவனே, வழிதவறி, நெறிதவறி நான்விழும் நேரமெல்லாம் எனைத்தாங்கி பிடிப்பதற்க்கே,
அப்பாவின் அன்பில்ஓர் அழகியல் இருக்கின்றது;அது.. மகள்களுக்கு மட்டுமேஉரித்தாகின்றது!
ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் நடமாடும் ஓர்உயிர் அப்பா!!!!
நான் எழுதும் தமிழ் கவிதையில் நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து என் “அப்பா” “அம்மா”.
அம்மாவின் பாசம் கருணையில் தெரியும் அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும்.
அப்பா என்ற ஒன்றின் இலக்கணத்தில் அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம், வெகுளித்தனம் என இவை அனைத்தும் அடங்கி விடும்.
நல்ல நடத்தையை யாரும் கற்பிக்க முடியாது தந்தையை தவிர இந்த உலகில்.
உன்னை எதிர்பார்த்து பெற்றெடுப்பாள் அன்னை... உன் எதிர்காலத்தை பெற்றுத் தருவான் தந்தை
சில நேரங்களில் பகைவன் போல தெரிந்தாலும் உனது பாசத்தை மிஞ்சிட யாரும் இல்லை இவ்வுலகில் என் அன்பு அப்பா..!!!
மழலை மொழி தாய்க்கு புரியும் தகப்பன் மொழி மகளுக்கு மட்டும் புரியும்...
உலகிலேயே அதிக பாதுகாப்பு மிகுந்த இடம் “தந்தையின் கை மட்டுமே“
கண்ணில் கோபத்தையும் இதயத்தில் பாசத்தையும் வைத்திருக்கும் ஒரே உறவு "அப்பா"
தாய்க்கு பின் சம்சாரம் ஆனால் தந்தைக்கு பின் தந்தை மட்டுமே.. யாரானும் அந்த இடத்தை நிரப்ப முடியாது.
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுன் வரை தாங்கிடும் ஒரே உயிர் அப்பா!
என்னை மட்டும் அல்ல. என் கனவுகளையும் சுமந்து எகரண்டு நடக்கிறார் என் அப்பா!
கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அவர்தான் என் அப்பா..!
அம்மாவை கோபித்து உந்தன் மார்பினிலே முகத்தை புதைத்திட்டு ஓரக் கண்ணாலே உன்னைப் பார்த்த சிறு வயது இன்னுமே என் மனதில் திடமாக பதிந்து இருக்கிறது என் அப்பா!!
எந்த பெண்ணும் அவள் கணவணுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு இளவரசியாகவே இருக்கிறாள்.
என்றும் தன் இளவரசியிடம் தோற்றுப்போவதை விரும்புபவர், அப்பா மட்டும் தான்!
Appa Kavithai
அப்பா கவிதை ( Appa Kavithai ) பற்றிய இந்த தொகுப்பு அப்பாவின் அன்பை கவிதைகளாக வெளிப்படுத்தும். அன்னை தன் வயிற்றில் பத்து மாதங்கள் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. எட்டி உதைத்த கால்களை கட்டி அணைத்து முத்தமிட்டு பூரித்து போவார். வாழ்க்கைச் சக்கரத்தில் நாம் வசதியாக வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்பு சக்கரம். நாம் எழுமுன் வேலைக்கு சென்று, நாம் தூங்கிய பின்பு வீடு திரும்பும் தன்னலமில்லா உள்ளம்.
அப்பா என்ற வார்த்தையில் தான் எத்தனை மந்திரங்கள். தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் ஔவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது. அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம் கோடி ரூபாய்க்கும் ஈடாகாது. அப்பாவின் கரம் பிடித்து நடக்கையிலே, கவலைகள் அனைத்தும் மறந்து போகும். பிள்ளைகள் துவண்ட போதும், 'நான் இருக்கிறேன், எதற்கும் கவலைப்படாதே' என்னும் நம்பிக்கையை தோற்றுவித்து. தன் பிள்ளையின் நிழலாகவே இருப்பார். தந்தை தனது குழந்தைக்கு பிரச்னைகளை எதிர்கொண்டு போராடும் எதிர்நீச்சலை கற்றுத் தருகிறார். எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல், துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள்மீது படாமல், அனைத்தையும் தம் தோளில் சுமப்பவரே தந்தை. தந்தை தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்று தோளில் சுமந்து உலகை காட்டுபவர். வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில், நரம்பு தெரியும் கைகளில், நரை விழுந்த தலைமுடியில் அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாக குடிகொண்டிருக்கிறது. அப்பாவை அதிகமாக நேசிப்பவர்களுக்கு இந்த அப்பா கவிதை ( Appa Kavithai ) வரிகள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.