கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

காதலர் தின வாழ்த்துகள்

அன்பு செய்யும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்

காதலர் தின வாழ்த்துகள் | 

Valentine's Day Wishes in Tamil

வணக்கம் நண்பர்களே, வருடந்தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி நாம் காதல் தினத்தை அன்பாக கொண்டாடி வருகிறோம். காலங்கள் மாறினாலும் காதல் இந்த மண்ணிலும் நம் மனதிலும் இன்னும் வாழ்கிறது. வாழ்வின் தொடக்கப் புள்ளியாக ஆரம்பித்த காதல், ஆயுள் முழுவதும் முழு நிலாவாக ஒளிரட்டும். வெளிப்படுத்தாத காதலை வெளிப்படுத்தும் நல்லநாள், வெளிப்படுத்திய காதலை மகிழ்வோடு கொண்டாடும் திருநாளாக காதலர் தினம் அமைகின்றது, இந்த சிறப்பான தினத்தில் நீங்கள் உங்கள் காதலை உங்களுடையவர்களுடன் கொண்டாட, இங்கே உங்களுக்காக சில அற்புதமான மற்றும் மனமுருகும் காதல் கவிதைகளும் " காதலர் தின வாழ்த்துகள் " ( Valentine's Day Wishes in Tamil ) கவிதைகளும், அழகான வரிகளும்!

நீ தூரமாக இருந்தாலும் உனது குரலை கேட்காத நொடிகள் இல்லை கேட்கிறேன் இதய துடிப்பில் ஏனென்றால் என் இதயம் துடிப்பது உனக்காக அல்லவா என்னவளுக்கு காதலர் தின வாழ்த்துகள்

உன்னில் நானும் என்னுள் நீயுமாக வாழும் நமக்கு தினமும் காதலர் தினமே!! எந்த தினம் என்றாலும் அனுதினமும் அவனுடன் இருந்தால் காதலர்தினம் தான்…! காதலர் தின வாழ்த்துகள்!!!!

இந்த நொடி நீளாதா என்று மனதை தவிக்கவிடுகிறாய் சுகமாய்!! மலரும் நினைவுகள் மனதை தாலாட்ட உறங்கிப்போனது விழிகள்!! ஏதோ ஒரு நினைவு விழிகளை நனைக்கும் போதெல்லாம் புன்னகையுடனேயே கடந்துவிடுகின்றேன் அந்நொடியை!!! காதலர் தின வாழ்த்துகள்!!!!

சலிக்காமல் காத்திருக்கும் நிலவாக உனை காண நான்!! என் கவிதைகளின் தலைப்பு நீ!! உன் கவிதைகளின் வரிகள் நான்!! நான் என்றோ தொலைந்தேன் உன்னுள் உனக்குள் நான்!! காதலர் தின வாழ்த்துகள்!!!!

அழகான இடத்திற்கு அழைத்துசென்று என் காதலை சொல்ல ஆசைதான்...! ஆனால் நீ என்னுடன் இருக்குமிடம் எல்லாமே அழகாய் தெரிகிறதே என்னதான் நான் செய்ய?

இன்று ஜெயிப்பது வெற்றி அல்ல ஆயுள்வரை தோற்காமல் இருப்பதுதான் உண்மையான வெற்றி.... காதலர் தின வாழ்த்து

தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி!! நான் பூக்களை பரித்துவிட்டால் உன் பாதி உயிர் கரையுதடி! நீ என்ன முரண்களின் மகளா! காதலர் தின வாழ்த்துகள்!!!!

இரண்டு நிமிடம் பேசிவிட்டு 24 மணிநேரம் நினைக்க வைக்க உன்னால் மட்டுமே முடியும்

பிடித்த தனிமையும் கொடுமையானது உன்னுள் தொலைந்ததிலிருந்து... காதலர் தின வாழ்த்துகள்

பூவுக்குள் உணர்ந்த அன்பை பூகம்பமாக்கிவிட்டு தடயமே இல்லாமல் தானே அழித்துவிட்டது காலம் ரணமாகிப்போன இதயத்திற்கு ஒத்தடமாய் இருப்பது உன் நினைவு மட்டுமே காதலர் தின வாழ்த்துகள்

எல்லோருக்கும் அழகை வர்ணிக்க தானே கவிதை தேவைப்படும் எனக்கு மட்டும் கவிதையை வர்ணிக்க நீ தேவைப்படுகிறாய்

கருங்கூந்தலை கலைத்திடும் தென்றல் காற்றும் உன் ஸ்பரிசத்தையே நினைவூட்டி செல்கிறது

தேநீரில் கரைந்த சக்கரையாய் கலந்துவிட்டாய் என்றும் திகட்டாத தித்திப்பாய் மனதில்

திணறடிக்கும் உன் அன்பில் சிறையிருக்க வேண்டும் ஆயுளின் கடைசி நொடிவரை ஆயுள் கைதியாய் உன் இதயத்தில் காதலர் தின வாழ்த்துகள்

ஏதோ ஒரு நினைவு விழிகளை நனைக்கும் போதெல்லாம் புன்னகையுடனேயே கடந்துவிடுகின்றேன் அந்நொடியை

கனவு கலைந்த பின்னும் விழிகள் மூடிக்கிடக்கின்றேன் உன் பிம்பம் கலைந்திட கூடாதென

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

என்னில் வைக்கும் அன்பை மிஞ்ச ' எவரும் இல்லை உன்னை விட அதனாலேயே உன்னை கெஞ்சி நிற்கிறேன் என்னை காதலி என்று...

kadhal kavithaigal | Best love quotes in tamil

ஆயிரம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற ஆயிரம் ஆயுள் வேண்டும் உன்னோடு மட்டும்.... இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

ஆயிரம் ஆசைகள் அத்தனையும் நிறைவேற்ற ஆயிரம் ஆயுள் வேண்டும் உன்னோடு மட்டும்... காதல் இனிய காதலர் தின வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

கனவுகளை நிஜங்களாக்கி கனவுக்குள் வைத்து வாழ்வதே புது சுகமாகும்..!!! இனிய காதலர் தின வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

சத்தமிட்டு சிரிப்பதும் சத்தமில்லாமல் அழுவதும் உன்னிடம் மட்டுமே இனிய காதலர் தின தமிழ் காதை வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

காதலர் தின வாழ்த்துகள் ' கல்யாணம் முடியும் வரை செய்வதல்ல காதல்... கண்மூடி சாகும் வரை செய்வதே காதல்...!

மேலும் பார்க்க

என்னை மறந்து கொஞ்ச நேரம் உலகை ரசிக்க நினைத்தால் அங்கும் வந்துவிடுகிறாய் நானே… உன் உலகமென்று

நீ வேண்டும் என்பதை தவிர, வேறு சிறந்த வேண்டுதல், எதுவுமில்லை எனக்கு.

பறவைகள் வாழ்வதற்கு கூடுகள் தேவை! காதல் வாழ்வதற்கு, அழகான இரு இதயங்கள் தேவை!

என்ன தவம் செய்ததோ உன் தொடுதிரை அலைபேசி நித்தமும் உன் விரல்கள் தீண்டுவதற்கு...!

இடைவிடாது பேசும் உன் இதழ்கள் அழகென்றால்...! இடையிடையே பேசும் உன் விழிகள் பேரழகு...!

தோட்டத்து ரோஜாகள் ஏளனம் செய்யவே ரோஜா தினமும் கடந்தது இன்று

பார்த்தது குறைவு தான்! அது கோர்த்து வடித்த கவிதை பல!

பிழையும் அழகாகிறது கலையாய் காணும் கண்ணுக்கு

காதலர் தின வாழ்த்துகள் ( Valentine's Day Wishes in Tamil )

Valentine's Day Wishes in Tamil

காதலர் தின வாழ்த்துகள் ( Valentine's Day Wishes in Tamil ) : மேற்கத்திய கலாச்சாரமாக இருந்தாலும், இன்று உலகமெங்கும் பலரால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் காதலர் தினத்திற்கு ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கின்றது. உடலுக்கு இதயம் எப்படி முக்கியமானதோ, அதே போல, வாழ்க்கைக்கு காதல் உயிர் போன்றதாக மதிக்கப்படுகிறது. ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறத்தை கடந்து இதயங்கள் இணைவதுதான் உண்மையான காதல். உண்மை காதலுக்கு என்றும் தோல்வி இல்லை என்பதற்கு ஏற்ப, காதலிப்பவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு திருவிழாவாக இல்லாமல், இளம் வயதினர் முதல், புதிதாய் திருமணம் ஆன தம்பதியினர் முதல், மூத்த வயதுடைய என்றும் இளமை மாறா மனமும் அன்பும் கொண்டு பல ஆண்டு திருமண வாழ்க்கையை வெற்றிகரமாய் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஜோடிகளும், இன்று இந்த காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.


நல்ல காதலுக்கு ஆண்டுக்கு ஒரு நாள் போதாது என்றாலும், வணிகமயமான உலகில் எதையும் அடையாளப்படுத்த ஒரு நாள் கட்டாயமாகிவிட்டது. காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமல்ல அன்பை, நட்பை பகிர்ந்துக் கொள்ளும் எல்லோருக்குமான நாள் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்யப் போகிறவர்கள் திருமணம் செய்து காதலிப்பவர்கள் என அன்பை பகிர்ந்துக் கொள்ளும் அனைவருக்கும் ‘ காதலர் தின வாழ்த்துகள் ( Valentine's Day Wishes in Tamil )’. காதலர் தினத்தன்று உங்கள் காதலை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் சமூகவலைதள பதிவுகள் மூலம் வெளிப்படுத்த கீழே உள்ள கவிதைகளையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி கொள்ளுங்கள்...