கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

உண்மையான அன்பு கவிதைகள்

இல்லறம் நல்லறம் ஆக அன்பு இன்றியமையாதது அன்பினால் கிடைக்கக்கூடிய பலன்கள் எண்ணிலடங்கா.

உண்மையான அன்பு கவிதைகள் |  

Unmaiyana Anbu Kavithaigal in Tamil

இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜீவனும் அன்புக்காக தான் ஏங்கி நிற்கிறது. உண்மையான அன்பு என்பது பிறர் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டும் அல்ல. நம் மீது அன்பு செலுத்தப்படுவதிலும் அது அடங்கியிருக்கிறது. அன்பினால் தீய குணங்களான கோபம், பொறாமை, அகந்தை ஆகியவை அழிக்கப்படுகின்றன. அன்பு என்ற மூன்றெழுத்தினால் பாசம், பரிவு, உண்மை, பண்பு, கடமை ஆகிய நற்குணங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. அன்பினால் சாதிக்க முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகைய சிறப்பான உண்மையான அன்பு கவிதை வரிகளை Unmaiyana Anbu Kavithaigal in Tamil - இல் இந்த பதிவில் பார்ப்போம்.

இனம், மொழி அறியாது அன்பு. சிறு புல்லில் கூட பூக்கலாம்.. பெரும் கல்லில் கூட பூக்கலாம்.. எங்கு வேண்டுமானாலும் அன்பு..!

இனம், மொழி அறியாது அன்பு. சிறு புல்லில் கூட பூக்கலாம்.. பெரும் கல்லில் கூட பூக்கலாம்.. எங்கு வேண்டுமானாலும் அன்பு..!

அன்பு கிடைப்பது "வரம்". அன்பு கொடுப்பது "புண்ணியம்". நாம் "புண்ணியம்" செய்வோம். கேட்ட "வரங்கள்" நமதாகும்.

அருகில் இருப்பதால் அன்பு அதிகரிப்பதும் இல்லை தொலைவில் இருப்பதால் அன்பு குறைவதுமில்லை

மனதில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே... கடினமான இதயம் கூட கரையும் அன்பை மழையாய் பொழியும் போது...

ஒருவரிடம் சொல்லி புரிய வைப்பதில் வருவதில்லை அன்பு. மனதால் உணர்ந்து அதை அடுத்தவர்களுக்கு அறிய வைப்பதில் தான் அடங்கியிருக்கிறது உண்மையான அன்பு.

அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு அதை பெற்றாலும் கொடுத்தாலும் சந்தோசமே!

நமக்காக வாழ்கின்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் சந்தோஷத்தை மட்டுமே...

பிடிக்காதவரை நேசிக்க தொடங்கிவிட்டால் இனி பிரிவுக்கே இடமில்லை...

அன்பு ஒளிரும் இடத்தில் கடவுளை பார்க்கலாம்.. கடவுள் உன் உருவிலும் தெரியலாம்.. நீ அன்பு செய்தால்.!

அன்பு ஒளிரும் இடத்தில் கடவுளை பார்க்கலாம்.. கடவுள் உன் உருவிலும் தெரியலாம்.. நீ அன்பு செய்தால்.!

அன்பு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று தான், ஆனால், அது உண்மை அன்பு உள்ளரிடம் மட்டுமே ஒட்டி கொள்ளும்.

அன்பு ஒளிரும் இடத்தில் கடவுளை பார்க்கலாம்.. கடவுள் உன் உருவிலும் தெரியலாம்.. நீ அன்பு செய்தால்.!

ஒரு வரிடம் பேசவே கூடாது என்று முடிவு செய்த பிறகும் அவரிடம் மீண்டும் பேச தூண்டும் உணர்வே உண்மையான அன்பு...!

நேசிக்கும் மனதில் கூட காயப்படும்போது வலி இருக்கும்.ஆனால் அன்பு கொண்ட இதயத்தில் காயத்திலும் தன்னலம் இல்லாத பாசம் தான் வெளிப்படும்.

அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள் அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்...!

கண்ணைத் திறந்து வைத்திருந்தால் அழகை காணலாம். அறிவை திறந்து வைத்திருந்தால் பொருளைக் காணலாம். மனதை திறந்து வைத்திருந்தால் அன்பைக் காணலாம்...

உன் மௌன சொற்களை எவரால் மொழிபெயர்க்க முடிகிறதோ, அவர்களே உன்னை முழுவதுமாய் உணர்ந்தவர்கள்!

அன்பை வெளிப்படுத்த ஆறறிவு தேவையில்லை அன்பு இருந்தால் போதும்.

உங்கள் அன்புக்கு உலகத்தையே பிடிச்சு உள்ளங்கையில் தர ஆசை..!

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

உண்மையன அன்பு கிடைக்கும் போது அதன் மதிப்பு தெரியாது இழந்த பின் தான் அதன் மதிப்பு தெரியும்..!!

kadhal kavithaigal | Best love quotes in tamil

இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் துணை நிற்பது தான் உண்மையன அன்பு..!!!

kadhal kavithaigal | Best love quotes in tamil

உண்மையான அன்பு ஆயிரம் தவறு செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது!

kadhal kavithaigal | Best love quotes in tamil

அன்பை மட்டுமே கடன் கொடுங்கள் அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.!

kadhal kavithaigal | Best love quotes in tamil

வேஷம் இல்லாத உண்மையான அன்பு தான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து

kadhal kavithaigal | Best love quotes in tamil

அன்பை கொடுத்து ஏமாந்து விடாதீங்கள்... அன்பை பெற்று ஏமாற்றி விடாதீர்கள் இரண்டிற்கும் வலி அதிகம்

மேலும் பார்க்க

உண்மையான அன்பு ஒரு போதும் எவரையும் ஏமாற்றாது.. அதை பெற்று கொண்டவர்கள் தான் ஏமாற்றுகிறார்கள்.

அன்பு மட்டும் தான் உலகில் நிலையானது.. அதை உண்மையாக்குவதும் பொய்யாக்குவதும் நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது.

அன்பு மட்டும் தான் உலகில் நிலையானது.. அதை உண்மையாக்குவதும் பொய்யாக்குவதும் நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது.

அழிந்து போகும் அழகு தேவை இல்லை எனக்கு. என்னை அரவணைக்கும் அன்பு மட்டும் போதும் எனக்கு.

உண்மையான அன்புகள் நம்மை சுற்றி இருக்கும் போது நாம் யாரும் தனி நபர் இல்லை

அன்பு எனும் எழுது கோலால் மட்டுமே வாழ்க்கை எனும் பக்கங்களை அழகாக்க முடியும்

பிரிவுகள் நிரந்தரம் அல்ல.. இமைகளில் பிறந்த உறவுகள் இதயத்தில் இருக்கும் வரை..!

கோபமும் ஒரு வகை அன்பு தான் அதை அனைவரிடமும் காட்ட முடியாது நெருங்கியவரிடம் மட்டுமே காட்ட முடியும்.

கணவன் மனைவி அன்பு என்பது சண்டை போடாமல் வாழ்வது அல்ல சண்டை போட்டலும் திரும்பவும் வந்து மனதை சமாதானப் படுத்துவதில் தான் இருக்கிறது

உண்மையான அன்பு கிடைக்கும் போது அதன் மதிப்பு தெரியாது இழந்த பின் தான் அதன் மதிப்பு தெரியும்..!

நீ என்னிடம் எதை எதிர் பார்த்தாலும் சரி நான் உன்னிடம் எதிர் பார்ப்பது உன் அன்பு மட்டுமே..!

தனக்கே வலித்தாலும் தன்னை சேர்ந்தவர்களுக்கு வலிக்க கூடாது என்று நினைப்பது தான் உண்மையான அன்பு..!

உண்மையான அன்பு கவிதைகள் ( Unmaiyana Anbu Kavithaigal in Tamil )

Unmaiyana Anbu Kavithaigal in Tamil

Unmaiyana Anbu Kavithaigal in Tamil - இறைவன் உயிர்க்குலதிற்குக் கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பு காட்டும் மனம் ஆண்டவன் இருக்கும் இடமாகும். அன்போடு உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் உணவு தயாரிக்கும் போது அதன் சுவை மேலும் கூடுகிறது. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும்போது நம் மனமும் அமைதி பெறுகிறது. பெரிய சிக்கல் வரும்போது கூட ஆறுதலாக நம்மை அரவணைக்க அன்பு காட்ட ஒருவர் இருந்தால் போதும் எந்த சிக்கலையும் எளிதில் தீர்த்து விடலாம். அன்பு மனிதர்களுக்கு மட்டும் இன்றி உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உரித்தானது. அன்பினால் சாதிக்க முடியாதது இவ்வுலகில் ஏதுமில்லை என்றால் அது மிகையாகாது. அன்பு கொண்டவர்கள் தங்கள் உயிரைக் கூட பிறருக்கு கொடுத்து துணிவார்கள். அன்புடையார் பிறர் துன்பப்படும் போது அது கண்டு தானும் துன்பம் கொள்ளுவர்.

இவ்வுலகில் அன்பு அள்ள அள்ளக் குறையாதது. அன்பு பிறருக்கு கொடுக்க கொடுக்க மேலும் வளரும், பெருகும். நமக்கு நன்மையையும், மகிழ்வையும் கொண்டுவரும், சாந்தியையும், சமாதானத்தையும் தரும். மனிதன் தனது வாழ்நாளில் மகிழ்வுடன் வாழ அன்பு அவசியமாகும். வசதியாய் வாழப் பணம் தேவை ஆனால், அந்த வாழ்வை மகிழ்வாகவும், நிறைவாகவும் வாழ அன்பு மட்டுமே போதும் ஆகின்றது. அன்பு என்னும் ஒற்றை சொல் இந்த உலகினை ஆள்கிறது. அன்பும் தெய்வீகமும் ஒன்றே. எங்கே அன்பு உள்ளதோ அங்கே தெய்வம் குடிகொள்ளும். இந்த உண்மையான அன்பு கவிதைகள் ( Unmaiyana Anbu Kavithaigal in Tamil ) உங்களை மேலும் அன்பானவராக மாற்றும் வல்லமை கொண்டவை. இலவசமாக படித்து ரசித்து பயன்பெறுவீர்.