வாழ்க்கை தத்துவம்
உன் பாதையை நீயே உருவாக்கிக் கொள்ளும் தண்ணீராக இரு. வாழ்வில் எதையும் சாதிக்கலாம்.
| Valkai Thathuvam
உலகில் அனைவருக்கும் பிரச்சனைகள் துன்பங்கள் இருக்கின்றன. எப்போதும் சந்தோஷமாக இருப்பவர் இந்த உலகில் யாருமில்லை. வாழ்வில் சாதிக்கவேண்டுமெனில் வேறு எதுவுமே தேவையில்லை. முழுமையான நம்பிக்கை, தூய்மையான அன்பு, முயற்சி மட்டுமே போதும். வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காகத் தரும்போது, நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்குக் கொடுங்கள். உன் துன்பங்களை நீ கடக்கும் போது சிரித்துக்கொண்டு மன வலிமையோடு கடந்து செல். இந்த பதிவிலுள்ள வாழ்க்கை தத்துவம் | Valkai Thathuvam என்ற தொகுப்பினுடாக வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை நீங்கள் காண முடியும். மனதில் வலிமையான எண்ணங்களை வளர்க்க உதவியாக இருக்கும்.
வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும் உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது.
கிடைக்காததை துரத்துவதும் கிடைத்ததை மதிக்காததும் தான் வாழ்க்கை.
அழகு உன்னை ஆளக் கூடாது.. அறிவுதான் ஆளவேண்டும்.. பிரிவு உன்னை ஆளக்கூடாது.. தெளிவு தான் உன்னை ஆளவேண்டும்.!
உழைத்துக் கொண்டே இருங்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு வாழ்வில் சலிப்பே வராது.
கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள், மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள்.
இலட்சியம் என்று ஒன்று இல்லாவிட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்!
பேசிக் கொண்டே இருக்காமல் செயலில் இறங்குவது அதை முடிப்பதற்கான வழி.
நாம் உலகிற்கு வந்ததே சேவை செய்வதற்காக தான் பிறரை அடக்கி ஆள்வதற்கு அன்று!
நோயை தொடக்கத்திலேயே குணப்படுத்துங்கள். கடனை சிறியதாக இருக்கும் போதே செலுத்திவிடுங்கள்.
உன்னால் முடியாது என்று பலர் கூறிய வார்த்தைகள் என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது
வாழ்க்கை எனும் பூந்தோப்பில் பூக்களும் முட்களும் உண்டு பல வலிகளைக் கடந்தாலே பூக்களை கொய்ய முடியும்
இரவுபோய் பகல் வருவதை போல் பிறப்புண்டேல் இறப்புண்டு இயன்றவரை உத்தமராய் இறுதிவரை வாழ்ந்திடுவோம்
வாழ்க்கை எனும் பெரும் போரில் நாம் அனைவரும் போர் வீரர்கள் பல காயங்களை அடைந்து வெற்றியை சுவைத்திடுவோம்
சூழ்நிலையால் மாறுகிறார்கள் கண்ணீரோடு மன்னிப்புக் கேட்பார்கள். சுயநலத்தால் மாறுகிறவர்கள்தான் கோபத்தோடு தர்க்கம் புரிவார்கள்..!
உனக்கு உதவியவரை ஒருபோதும் மறக்காதே உன் மேல் அன்புகொண்டவரை ஒருபோதும் வெறுக்காதே உன்னை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றாதே.
நேரம் போய்கொண்டேதான் இருக்கும், எனவே நீ செய்யவேண்டியதை செய். அதுவும் இப்போதே செய் காத்திருக்காதே.
சில நேரங்களில் நாம் எடுக்கும் தவறான முடிவுகள் நம்மை சரியான பாதையில் செல்ல கற்றுக்கொடுக்கின்றன..!
வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை ஆனால் வந்த எதுவும் ஒரு பாடம் கற்றுத்தராமல் போவதில்லை!
வெறும் பெருமைக்காக எதையும் செய்யாதே உன் மன நிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்
காத்திருக்க கற்றுக்கொள்.. எல்லாவற்றிற்கும் உரிய ஒரு நேரம் இருக்கிறது அவசரபடுவதால் நிம்மதி தொலையுமே தவிர 'நமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை
மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக வையுங்கள் கிடைக்கும் இடத்தில் பெற்றுக்கொண்டு கிடைக்காத இடத்தில் கொடுத்து விட்டு செல்வோம்
உங்களின் திறமையைக் கூட பலர் திமிராகப் பார்க்கலாம் மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையை தானே தவிர உங்களின் திறமையை அல்ல..!
தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும்! இல்லையேல், வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்...
பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள். இனி பிறக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடன் வாழுங்கள்!
கஷ்டங்கள் வரும்போது எதிர்நீச்சல் போட கற்றுக் கொள்ளவில்லை எனில், நீச்சல் தெரிந்தும் பயனில்லை!
தத்துவத்தை படிச்சா என்னடா வாழ்க்கை இது அப்படி தான் தோணும்! அதே தத்துவத்தை புரிஞ்சிகிட்டா இதான் வாழ்க்கை அப்படின்னு தோணும்!
வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும், வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும் அர்த்தங்கள் ஆயிரம் உண்டு.. வலிகளை சுமந்து வழியைத் தேடும் பயணம் தான் வாழ்க்கை!
அடுத்தவர் விரும்பியபடி தான் பேச வேண்டுமானால், பொய் தான் பேச வேண்டும்! அடுத்தவரின் விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டுமானால், நடிக்கத்தான் வேண்டும்! நம் வாழ்வை நாம் வாழ்வோம், நமக்கு பிடித்தபடி!
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி, ஒரே தவற்றைத் திரும்பத்திரும்பச் செய்பவன்முட்டாள்!ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை தன்னையறியாமல் தவறு செய்து தன்னையறிந்து திருத்திக்கொள்பவன் மனிதன்..!!
நமக்குப் பிடித்தமானவை எல்லாம் நமக்கானது என நினைக்கிறோம், ஆசை துளிர்விடுகிறது மெல்லப் பேராசையாகிறது நாம் அடைய நினைத்து வேறொருவருக்குச் சொந்தமாகும் போகும் நிராசை அடைகிறோம் ஒன்றை நினைவில் கொள்வோம்: நமக்கானது நம்மை விட்டு எங்கும் செல்லாது.
Valkai Thathuvam
வாழ்க்கை தத்துவம் ( Valkai Thathuvam ) | வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் ஏராளம். பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்ற சராசரி வாழ்க்கையில் எவ்விதமான தடைகளோ வேதனைகளோ அவமானங்களோ இல்லை. ஆனால் சாதிக்க நினைக்கும் சரித்திர வாழ்வில் தடைகளும் வலிகளும் அதிகம் தானே. இப்படித் தான் வாழவேண்டுமென்று ஒரு சாராரும் எப்படியாவது வாழலாம் என்று ஒரு சாராரும் வாழ்கின்றனர். இவர்களால் கூட வாழ்ந்து விட இயலும். ஆனால் இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாமல் இருக்கும் இடைப்பட்ட பிரிவினரின் வாழ்க்கையே கடினமானதாக இருக்கிறது. பிரச்னைகளே இல்லாத வாழ்வு வேண்டும் என்று வேண்டுவதை விட பிரச்னைகளை எதிர் கொள்ளும் மன நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்மை காயப் படுத்தவும் விமர்சிக்கவும் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். பின்னால் பேசுபவர்களுக்கு காது கொடுத்தால் நாம் முன்னே செல்லவே முடியாது.
நமக்கு வாழ்கை பல அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத் தருகின்றது அதில் முக்கியமான ஒன்று தான் நாம் யார் யாரிடம் எவ்வாறு பழக வேண்டும் எந்த அளவோடு பழக வேண்டும் என்பது. உங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றுவது புத்திசாலித்தனம் என்று நினைக்காதீர்கள் அது தான் துரோகத்தின் உச்சம். ஒருவன் எத்தனை காலம் வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்பதே சிறப்பாகும். நமக்கான பாதையில் தடுமாறாமல் தடம் மாறாமல் வாழ்வதே அழகானது. வாழ்க்கை ஒன்று; பார்வைகள் பல விதமாக இருக்கிறது. வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்குள் இருக்கும் திடகாத்தமான ஆற்றலை வெளிக்கொணர வேண்டி வாழ்க்கை சோதிக்கும் இந்த பரீட்சையில் வெல்வதும் வீழ்வதும் என்றுமே உன் கையிலே. உங்கள் வாழ்க்கைக்கு தேவையான “வாழ்க்கை தத்துவம்” உங்களுக்கு சிறந்த “Motivation” ஆக இருக்கும்.