கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

அம்மா கவிதைகள்

கோடி உறவு அருகில் இருந்தாலும் அம்மாவை மிஞ்சிட உலகில் உறவேதும் இல்லை.

அம்மா கவிதைகள் | Amma Kavithai in Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. ஒரு உண்மையான அன்பை காணவேண்டும் என்றால் அது தாயின் கண்களில் மட்டுமே காண முடியும். நம் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டவர் அம்மா மட்டுமே. நாம் எவ்வளவு வயதானாலும், நம் தாயின் அன்பு எப்போதும் நமக்கு அர்த்தமுள்ளதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். அம்மாவின் அன்பு தூய்மையானது. தாயின் அன்பிற்கு நிகரான உண்மையான பாசம் இந்த உலகில் இல்லை. இந்த பதிவில் அம்மா கவிதை ( Amma Kavithai in Tamil ) தொகுப்பை பார்க்கலாம்.

உடைந்து போகும் தன் பிள்ளைகளின் நம்பிக்கைக்கு ஊன்று கோலாக அமையும் அம்மாவின் அரவணைப்பு, பேரானந்தமே!

தனக்காக வாழாமல் எந்நாளும் தன் கணவருக்காக, தான் பெற்ற குழந்தைகளுக்கா வாழும் ஓர் உன்னத ஓவியம் "பெண்"

உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை

இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது தாய்மை

தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் போதே கட்பிக்க பட்டு விடுகிறது “அம்மா” என்னும் மூன்று எழுத்து.

ஆயிரம் பேர் உன்னை குறை கூறினாலும், "உனக்கு என்னடா குறை” என சொல்லும் அன்னையின் அன்பிற்கு நிகரான சக்தி ஏதுமில்லை!

ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா சமயலறை

பூமி தாங்கும் முன்னே, நம்மை பூவாய் தாங்கியவள் நம் அன்னை.

அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின் அன்பு...!

கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்!

பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள் வெற்றி உங்கள் காலடியில் !

இந்த உலகில் அளவிட முடியாத ஒன்று உள்ளது என்றால் அது தாயின் பாசம் மட்டும் தான்.

வலி நிறைந்தது என்பதற்காக யாரும் விட்டுவிடுவதில்லை தாய்மை!

நான் முதல்முறை பார்த்த அழகிய பெண்ணின் முகம் அம்மா

ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள்

மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசும் துரோகம் தெரியாத உறவு உலகில் அம்மா மட்டுமே.

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்...! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான் அம்மா !

kadhal kavithaigal | Best love quotes in tamil

அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச் சித்திரம் அம்மா

kadhal kavithaigal | Best love quotes in tamil

வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. அவள் தான் அம்மா.

kadhal kavithaigal | Best love quotes in tamil

ஆரம்பம் முதல் கடைசி வரை மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு, அது அம்மாவின் அன்பு மட்டுமே.!

kadhal kavithaigal | Best love quotes in tamil

இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு...!

kadhal kavithaigal | Best love quotes in tamil

மூன்றெழுத்து கவிதை சொல்லச் சொன்னால் முதலில் சொல்வேன் அம்மா என்று...!

மேலும் பார்க்க

ஆயிரம் அர்த்தங்களை உள்ளாகியது அம்மா எனும் உன்னத வார்த்தை.

செய்த குற்றங்கள் அனைத்தையும் மன்னிக்கும் ஒரே கடவுள். அம்மா...!

வலி கொடுத்து பிறந்தாலும் பிள்ளைக்கு ஒரு வலி என்றால் துடிக்கிறது தாயின் தூய்மையான இதயம்.

உன்னை அணைத்து பிடிக்கும் போதெல்லாம் உணர்கிறேன் உலகம் என் கையில் என்று

அன்புகலந்த அக்கறையோடு சமைப்பதால் தான் எப்போதும் அம்மாவின் சமையலில் சுவை அதிகம்

ஆறாத காயங்களுக்கு ஆறுதல் தேடி அழைந்தாலும், இறுதியில் அடைக்கலம் கிடைப்பதென்னவோ, அன்னையின் மடியில் தான்!

ஊர் முழுவதும் பல நூறு கோயில்கள் இருந்தாலும், அம்மாவைப் போல் ஒரு சாமி இல்லை!

அன்பின் மழைச் சாரல் அவளது உழைப்பின் வியர்வை, புன்னகை பொழியும் அவள் முகம் காதலின் மர்மம், அம்மா!

உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்.. "தாயின் கருவறை"...

இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது தாய்மை...

அம்மாவின் கைக்குள் இருந்த வரை உலகம் அழகாகத்தான் தெரிந்தது.

ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள் அம்மா...

ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை #அம்மா சமயலறை

வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. அவள் தான் அம்மா..

தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் மகனை கண் கலங்காமல் பார்த்து கொள்பவள் "அம்மா"

நம்மிடம் சிரித்துபேசும் பெண்களுக்காக நாம் மாறுவதை விட மற்றவர்களிடமும் நம்மை மதித்து பேசும் தாயை ஏமாற்றிவிடாதே..!

நீ இல்லை என்றால் நானும் இல்லை ஆனால் நீ இல்லா உலகில் மட்டும் தவிக்க விட்டு சென்றாயே அம்மா..!

தாயின் ஒவ்வொரு அடக்கு முறையும் பிள்ளையின் சுதந்திரத்தை பறிப்பதற்கல்ல வாழ்க்கையை போதிக்கவே..!!!

கோடி உறவு அருகில் இருந்தாலும் அம்மாவை மிஞ்சின உறவேதும் இல்லை..

உன்னுயிர் பிரித்து என்னுயிர் கொடுத்த என் தாயே, என் இன்னுயிர் நீர்த்தேனும் உன் உயிர் காப்பேன்!!!

தன்னலம் விரும்பி வாழும் உலகில், என் நலம் விரும்பி வாழும் ஓர் உயிர் "அம்மா"

எவ்வளவு வயதானாலும் வாழ்வில் ஒரு கஷ்டம் வரும் போது... மனது உடனே தாயைத்தான் தேடுகிறது... இவ்வுலகில் எதிர்ப்பார்ப்பு இல்லாத ஒரே அன்பு #அம்மா

நான் முதல்முறை பார்த்த அழகிய பெண்ணின் முக தரிசனம் நீ 'அம்மா'

கடல் நீரை கடன் வாங்கி கண்கொண்டு அழுதாலும் நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா..!

இல்லாத வாழ்க்கை வாழ்க்கையாக நான் அறியேன்.. உன் பாசத்தின் மிச்சம் இன்னும் ஜீன் நினைவுகளில் இருப்பதால் நானும் உயிர் வாழ்கிறேன்..!

உன் தசையோடு என்னை தச்சுத்தான் சுமந்தியே... உன் உயிரால என்னை ஊற்றித்தான் உருவாக்கினியே..

அன்னை விடுமுறை என்கிற வார்த்தைக்கு இடமில்லை இவள் வாழ்க்கையில்..!

இந்த உலகில் வர்ணிக்க வார்த்தைகளும் கவிதைகளும் இல்லாத உறவு என்றால் அது “அம்மா”..!

அம்மா கவிதைகள் (Amma Kavithai in Tamil)

Amma Kavithai in Tamil

சுமையாய் வந்த என்னை சுகமாய் ஏற்ற தாயே! உன்னை உருக்கி என்னை வடித்த சிற்பி நீயே! ஆயிரம் முத்தங்கள் இட்டு, என்னை அரங்கேற்றம் செய்தாய்! எனக்காக மட்டும் வாழும் என் அன்பு தாயே, இனி எத்தனை பிறவி எடுத்தாலும் என் அன்னை நீயே!

உலகில் உள்ள உறவுகளில் ஒரு புனிதமான உறவு அம்மா. அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. இந்த பதில் உள்ள அம்மா கவிதை ( Amma Kavithai in Tamil ) உங்களிற்கு உண்மையான அன்பின் மகத்துவத்தை உணர்த்தும். அனைத்து உயிரினங்களும் அதிகம் நேசிக்கும் ஒரு பந்தம் என்றால் அது அம்மா. நம்மால் கடவுளை கண்ணால் பார்க்க முடியாது ஆனால் கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் என்றால் அம்மா. அம்மாவை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. நமக்கு இந்த உலகத்தை காட்டியவரே அம்மா தான். உலகில் தனக்கென எந்த ஒரு தேவைகளையும் எதிர்பார்க்காமல் நம்மீது அதிக பாசத்தை காட்டக்கூடிய ஒரே ஜீவன் அம்மா தான். அம்மா என்கின்ற உறவுக்கு அடுத்து தான் இந்த உலகத்தில் மற்ற உறவுகள் எல்லாம். அம்மா என்ற உறவை பற்றி புகழ வார்த்தைகளே இல்லை.

தமிழின் உயிர் எழுத்துக்களில் முதலாகி மெய் எழுத்துக்களில் இடையாகி உயிர் மெய் எழுத்துக்களில் கடை ஆகி முற்று பெற்று வரும் பெயர் கொண்ட அற்புத பிறவி அம்மா. சோர்ந்து போய் வந்தாலும் சரி தோற்றுப் போய் வந்தாலும் சரி என்றுமே ஆதரவுகரமாக கூடவே இருக்கும் ஒரே தெய்வம் அம்மா. வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தால் என்ன அம்மாவின் முகத்தை பார்த்ததும் அவள் தரும் ஆறுதலால் மீண்டும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு வலிமை பிறந்து விடும். Amma Kavithai in Tamil - இந்தத் தொகுப்பில் சிறந்த தமிழ் அம்மா கவிதைகள், அம்மா கவிதை வரிகள் , அம்மா கவிதை புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம்..