அன்னையர் தின வாழ்த்துகள்
தாய்மை உள்ளம் படைத்த அனைவோர்க்கும் 'அன்னையர் தின வாழ்த்துகள்'.
அன்னையர் தின வாழ்த்துகள்
| Mothers Day Quotes in Tamilஅம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. உலகில் அனைவோரும் பிறப்பெடுப்பது பெண்ணாலே அவளது தாய்மையே நம்மை மனிதராக்குகிறது மனிதத்தை விதைக்கிறது. உலக உயிர்களின் அனைத்திலும் தாய்மை ஓர் உயர்ந்த அம்சமாகும். அவ்வம்சம் பெண்களுக்கு உடலாலும் உள்ளத்தாலும் வாய்க்கப்பெற்றுள்ளது. தாய்மை உள்ளம் படைத்த அனைவோர்க்கும் 'அன்னையர் தின வாழ்த்துகள்'. இந்த அன்னையர் தினம் மே 8, 2022 அன்று உலகளாவிய தாய்மை உள்ளம் படைத்த பெண்களுக்கு அன்னையர் தின வாழ்த்து சொல்வதற்காக தமிழ் கவிதை வலைத்தளம் அன்னையர் தின வாழ்த்துகள் ( Mothers Day Quotes in Tamil ) கவிதையினை தொகுத்து உள்ளது.
நீ நிர்கதியாக நிற்கும் பொழுது உன்னை சுற்றியுள்ள அனைத்து மனித உறவுகளும் உன்னை விட்டு விலகும்; எந்த சூழ்நிலை வந்தாலும் உன்னை விட்டு விலகாத ஒரே உறவு "அம்மா!" அன்னையர் தின வாழ்த்துகள்.
கனவு, ஆசை, இலட்சியம் ஆகியவற்றை கலைத்து தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
அன்பின் மொழியை அறிமுகம் செய்யும்.. அற்புத கடவுள் அம்மா ..! அன்னையர் தின வாழ்த்துகள்..
அன்பு அக்கறை அரவணைப்பு பாசம் நேசம் தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் கொண்ட வாழும் கடவுள் அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்
ஒரு தாயின் பாசம், அந்த வானத்தைப் போல் அளவுக்கடந்து இருக்கும்! தாய்மார்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!
இது வரை நான் கண்ட வெற்றி தோல்விக்கான (அனுபவத்தின்) அடித்தளம் என் அம்மா... என்னை பெற்றெடுத்த என் தாய்க்கும் என்னை மகனாக ஏற்றுக் கொண்ட அன்னையர்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
அன்னையர் தினத்தில் மட்டும் அன்னையை கொண்டாடாமல் அன்றன்றைக்கும் கொண்டாட வேண்டும்! அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
இழந்தவன் தேடுவதும், இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு! அன்னையர் தின வாழ்த்துகள்!
படிக்காதவள், எவராலும் படிக்க முடியாதவள் என் அம்மா
படிக்காதவள், எவராலும் படிக்க முடியாதவள் என் அம்மா
இந்த உலகில் வர்ணிக்க வார்த்தைகளும் கவிதைகளும் இல்லாத உறவு என்றால் அது “அம்மா”..!
இறைவன் எனக்கு தந்த முதல் முகவரி உன் முகம் தான் அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்
பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில் நம்மை தாங்கியவள் அன்னை! அன்னையர் தின வாழ்த்துகள்!
கடைசியாய்ச் சாப்பிடுவாள் என் தாய்! இது பண்பாடல்ல, எனக்குப் பற்றாமல் போய்விடுமோ சாப்பாடு என்று! அம்மா உனக்கு அன்னையர் தினம் வாழ்த்துகள்!
பிடிவாதம் , வெறுப்பு, கோவம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் அன்பு மட்டுமே செலுத்தும் அம்மாவிற்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள்
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்... "தாயின் கருவறை" அன்னையர் தின வாழ்த்துகள்
அம்மா தன் உயிரைக் கொடுத்து மற்றாரு உயிரை காப்பாற்றும் தெய்வம் அன்னையர் தின வாழ்த்துகள்
வாழ்க்கை என்னும் போட்டியில் விட்டுக் கொடுத்து ஜெய்ப்பாள் அம்மா ! அன்னையர் தின வாழ்த்துகள்
பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில் நம்மை தாங்கிய அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துகள்
கடல் நீரை கடன் வாங்கி கண்கொண்டு அழுதாலும் நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா அன்னையர் தின வாழ்த்துகள்
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிமோசனம்... தாயின் கருவறை.... அன்னையர் தின வாழ்த்துகள்
இந்த பூவுலகில் நான் தோன்றுவதற்கு முன்பே பாசத்தோடு பார்த்தவளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்
அம்மா என்றால் அன்பு. அன்பின் வழியது உயர்நிலை என்பதை தாரக மந்திரமாய் சுமந்து வாழ்வின் எப்படியிலும் நம்மை தாங்கி நிற்கும் அன்னையவளுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்
மனிதனை மனிதன் சுமக்காவிடில், மனித குலமே அழிந்திருக்கும். சுமையென பாராமல், சுகமாய் சுமக்கும் அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!.
மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்! என் அம்மா காலில் மிதிபட அல்ல! என்னை சுமந்த அவளை ஒரு முறை நான் சுமப்பதற்காக!
கருப்பை ஒன்றை காதலோடு சுமக்கிறாள்! வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்! மறு பிறவி எடுத்து உனக்கு உயிர் தருகிறாள் அம்மா!
உயிர் எழுத்தில் "அ" எடுத்து மெய் எழுத்தில் "ம்" எடுத்து உயிர்மெய் எழுத்தில் "மா" எடுத்து அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து "அம்மா". அன்னையர் தின வாழ்த்துகள்
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்.... அன்னையே உன்னை போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில்...... அன்னையர் தின வாழ்த்துகள்
அன்பின் துவக்கம் மற்றும் முடிவே தாய்மை! அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் இருக்கும் வரையில்..!! அன்னையர் தின வாழ்த்துகள்
Mothers Day Quotes in Tamil
தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது மந்திரம் இல்லை வேதமாகும். உலகில் மிகக் கடினமான பொறுப்பு தாயாய் இருப்பது தான். ஆனால் இதற்கு நீங்கள் யாருடைய பாராட்டையும் எதிர் பார்ப்பதில்லை. எங்களின் தோழி, வழிகாட்டி, குரு என எல்லாமே நீங்கள் தான். எதுவும் எதிர்பாராத அட்ஷய பாத்திரம் அவர்களின் அன்பாகும். உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும், ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை உணர்த்துகிறது. இறைவன் அனைத்து உயிர்களுக்கும் உடனிருக்க முடியாது என்ற காரணத்தால் தன் பிரதிநிதியாக தாயைப் படைத்தார்.
பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் 'அன்னை' என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. சம்பளமே இல்லாத முழு நேர வாழ்நாள் வேலை அம்மா உத்யோகம் தான். ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் கூடவே ஒரு தாயும் பிறக்கின்றாள். ஒரு பெண் என்பவள் மனைவி, தாய் என்ற பதவி பெறும் பொழுது ‘நான், என் விருப்பம், என் வயிறு’ என்ற அனைத்தையும் கருப்பையில் இட்டு தியாகம் செய்து விடுகின்றார். இந்நாளை அதை மேலும் சிறப்போடு அனைவருக்கும் நினைவுப் படுத்தி போற்றும் நாளாகும். அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள். ஆகவே இத்தகைய அன்னையர் தினத்தன்று நமது தாயாரை வாழ்த்தும் வகையில் இந்த பதிவில் அன்னையர் தினம் வாழ்த்துகள் ( Mothers Day Quotes in Tamil ) படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்ததை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்.