கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

உறவுகள் கவிதைகள்

மனித உறவுகள் விலைமதிப்பற்றவை எனவே அவற்றை பத்திரமாக பராமரிக்க வேண்டும்.

உறவுகள் கவிதைகள்

  | Uravugal Kavithaigal

வாழ்க்கையில் நாம் ஆயிரம் சாதனைகள் படைத்து விட்டோம், குடும்பத்திற்காக உழைப்பதில் குடும்பத்தையே மறந்துவிட்டோம். இந்த உலகம் பணமில்லாத ஒருவனை அனாதை என்று சொல்லுவதில்லை. ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடிகள் வைத்து இருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைய காலகட்டத்தில் சிந்தித்துப் பார்த்து சீர்துாக்க வேண்டிய விஷயம்தான் உறவுமுறை. இந்தத் தொகுப்பில் உறவுகளை மேம்படுத்த " உறவுகள் கவிதைகள் " மற்றும் உறவுகளைப் பற்றிய பொன்மொழிகளும் காணப் போகிறோம்.

உலகில் உறவு என்பது புத்தகம்.. தவறு என்பது ஒரு பக்கம்.. ஒரு பக்கத்திற்காக ஒரு புத்தகத்தை இழந்து விடாதீர்கள்..!

சண்டையிடும் போது அமைதியாய் இருப்பவர்கள் தவறு செய்தவர்கள் அல்ல.. வார்த்தைகளை விட்டால் உறவு பிரியும் என்று உணந்தவர்கள்.

ரத்த உறவு மட்டுமே சொந்தமா? உள்ளங்கள் ஒத்த எந்த உறவும் சொந்தமே.

எல்லா நேரங்களிலும் மனம் விட்டு பேசுவதற்கும், அன்பு காட்டுவதற்கும், ஓர் உறவு கிடைத்து விட்டால், வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்.

ஏங்கும் போது கிடைக்காத உறவு அதன் ஏக்கம் முடிந்த பின் கிடைத்து எந்த பயனுமில்லை.

கோபத்திலும் உங்களை சபிக்காத உறவு கிடைத்தால் அவர்களை விட்டு விடாதீர்கள் நீங்கள் சேர்த்து வைக்காத சொத்து அவர்கள்.

வாழ்க்கையில் உயரும் வரை காதை மூடிக் கொள்ளுங்கள்.. உயர்ந்த பிறகு வாயை மூடிக் கொள்ளுங்கள்..!

நிறம் மாறும் பச்சோந்திகளை விட அடிக்கடி மனம் மாறும் மனிதர்களிடமே அதிக கவனம் தேவை.

ஒரு சிலரை பார்த்தவுடன் அவர்கள் மீது அன்பு வரும்.. பழகிய பின் உண்மையானவர்கள் என்று புரியும் போது மரியாதை வரும்.. அன்பு மலர்ந்து மரியாதையாக மிளிரும் போது மனதில் நம்பிக்கை தோன்றும்.!

அழகான அறிவார்ந்த பெண் மனைவியாக அமைவது அதிர்ஷ்டம் மட்டுமே! அமைந்த மனைவியை ஆயுள் வரை கண் கலங்காமல். அழகாக வைத்திருப்பதே ஆண்மை!

சுய நலத்திற்காக உன்னோடு சிரித்து பழகும் உறவுகளை விட ஏதோ ஒரு மூலையில் உனக்காக கண்ணீர் சிந்தும் உறவை நேசி!

"உனக்காக எதையும் இழப்பேன்" என்று சொல்லும் உறவை விட, "நீ எதை இழந்தாலும் உன்னுடன் நான் இருப்பேன்" என்று சொல்லும் உறவே சிறந்த வரம்.

ஆசையை பகிரவோ இல்லை அன்பை பொழியவோ! ஆறுதலுக்காகவோ இல்லை அணைத்து உறங்கவோ! புரிந்து கொண்ட புனிதமான ஓர் உறவு தேவை அனைவருக்கும்!

பணமும் புகழும் மரத்தின் கனிகள்! நட்பும் உறவும் வேர்கள்! கனிகள் இன்றி வாழ இயலும்! வேர்கள் இன்றி வாழ இயலாது!

மனசு சரியில்லை அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லும் உறவை விட, மனசு சரியில்லை அதானால் தான் உன்னிடம் பேசுகிறேன் என்று சொல்லும் உறவு வலிமையானாது உண்மையானது.

நீ யாருக்காக வாழ்கிறாயோ அவர்களுக்காக பலமுறை விட்டு கொடு. உனக்காக யார் வாழ்கிறார்களோ அவர்களை ஒருமுறை கூட விட்டு கொடுக்காதே.

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

உறவு என்பது புத்தகம் போன்றது படித்தும் தெரிந்து கொள்ளலாம் பட்டும் தெரிந்து கொள்ளலாம்

kadhal kavithaigal | Best love quotes in tamil

அழகாய் இருப்பதை விட... அன்பாய் இருந்தால் , ஆயிரம் உறவுகள் தேடி வரும்..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

வாழ்வை வசதியாக மாற்ற தான் பணம் வேண்டும்... வாழ்வையே மகிழ்ச்சியாக மாற்ற நல்ல உறவுகள் போதும்

kadhal kavithaigal | Best love quotes in tamil

தனது தேவை முடிந்ததும் தள்ளி விட்டு மண்ணை போடுவபவர்கள் மத்தியில் தவறி விழுந்தாலும் தாங்கி பிடிக்கும் உறவு கிடைத்தால் வரம் தானே...!!!

kadhal kavithaigal | Best love quotes in tamil

சில உறவுகள் மறைந்தாலும் நம் உணர்வாக வாழ்கிறது.. சில உறவுகள் வாழ்ந்தாலும் நம் உணர்வில் மறைகிறது.. பணம் சில உறவுகளை தருகிறது.. பாசம் நம் உணர்வில் வாழ்கிறது..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்கு ஆயிரம் உறவுகள் தேவை இல்லை - தமிழ் கலை, உண்மையாக நேசிக்கும் ஒரு உறவு போதும்..!

மேலும் பார்க்க

உயிரும் உணர்வும் கலந்ததுதான் உறவு. அதை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே.

புரிந்து நடக்க ஒரு துணையிருந்தால், சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம்! வாழ்க்கை முழுவதும்!

கடந்த காலத்தை மறக்கடிக்கும் அளவுக்கு அன்பு செய்யும் துணை கிடைப்பது வாழ்வின் வரம்.

நீயா நானா என்பதல்ல! நீயும் நானும் என்பதே! இல்வாழ்க்கை

ஒவ்வொரு உறவும் நம் வாழ்வின் உதவக்கூடிய உறவுதான். வாழ்வில் உறவு என்பது இருக்க வேண்டும்.

உறவினர்கள் என்ற போர்வையில் நம்மில் சில துரோகிகளும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

குடும்பம் என்பது குருவி கூடு. பிரிப்பது எளிது, இணைப்பது கடினம்.

மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான் மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்.

உறவுகள் கவிதைகள் ( Uravugal Kavithaigal )

உறவுகள் கவிதைகள்

உறவுகள் கவிதைகள் ( Uravugal Kavithaigal ) : ஒரு மனித உயிர் இந்த உலகில் வரும் போதே தாயின் தொப்பிள் கொடி உறவுடன் தான் மலர்கின்றது. உறவு என்பது இரு நபர்களுக்கு இடையில் உணரும் ஒருவிதமான மனநிலை ஆகும். நாம் சந்திக்கும் மனிதர்களிடம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவை பொறுத்து தான் நமது வாழ்க்கை அமைகின்றது. அது நல்ல உறவாய் இருந்தால் வாழ்கை மகிழ்ச்சியாக அமைகின்றது. அந்த உறவில் குறைபாடு உண்டெனில் வாழ்க்கை நரகமாக மாறுகின்றது. ஆக நமது வாழ்வு ஆரோக்கியமாக அமைய உறவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நல்ல உறவுகள் நமது நல வாழ்வை தாங்கிப் பிடிக்கும் தூண்களாகும். சொந்த வாழ்வில் ஏற்படக் கூடிய சுக துக்கங்களின் போது எம்மை தாங்கிப் பிடித்து தேற்றவும் எம்மோடு சேர்ந்து கொண்டாடவும் எமது உறவுகளால் மாத்திரமே முடியும். உறவுகளே சந்ததிகளுக்கு இடையிலான பாரம்பரியம் மரபுகளை கடத்தும் பாலமாக உள்ளன. உறவுகள் தான் ஒவ்வொரு மனிதனையும் சமூகமயப்படுத்தும் காரணிகளாகவும் உள்ளன. அந்தக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் அனுபவித்த அத்தனை நன்மைகளையும் இழந்து விட்டு பொருளாதாரத்தை மட்டும் மையமாக வைத்துக் கொண்டு நமக்கு நாமே செய்து கொண்ட தீமைதான் இன்றைய வாழ்க்கை முறை. ஒரு காலத்தில் நாம் இருவர், நமக்கு இருவர் என்று திட்டமிட்டோம். அதன்பின்பு நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று முடிவெடுத்தோம். இன்று நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர் என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம். இப்படி இருக்கும் பொழுது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வளரும். உறவுகள் இல்லாத நிலையில் நாம் செல்வம் அற்றவர் ஆகிவிடுகிறோம், பணம் இருந்தும் ஏழையாகி நிற்போம். உறவுகள் சூழ வாழாதவருக்கு மனமகிழ்ச்சி இருக்காது. எனவே நம்மோடு உள்ள உறவுகளை மதித்து அவர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவர்களாக வாழ்வோம். உறவுகள் கவிதைகள் ( Uravugal Kavithaigal ) உங்களுக்கு உறவுகளின் வெளிப்பாட்டை கவிதை வரிகளாக வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.