ஏமாற்றம் கவிதைகள்
மனித வாழ்வின் ஒரு அங்கம் ஏமாற்றம். அன்பை கொடுத்து ஏமாறுபவர்களுக்கு தான் அதன் வலி புரியும்.
ஏமாற்றம் கவிதைகள்
மாற்றங்கள் ஏமாற்றங்களிலிருந்து தான் பிறக்கின்றன. தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால், வாழ்வில் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அதை எளிதாக ஏற்றுக் கொள்ள நம்மால் முடிவதில்லை. அதைக் கடந்து வர முடியாமலும் அவதிப்படுகிறோம். இந்த பதிவில் ஏமாற்றம் கவிதைகள் தொகுப்பை பார்க்கலாம். அன்பை கொடுத்து ஏமாறுபவர்களுக்கு தான் அதன் வலி புரியும்.
ஏமாந்து போவதற்கு முட்டாளாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அன்புக்கு ஏங்கும் மனம் கொண்டவர்களாக இருந்தாலே போதும்.
ஏமாற்றி பிழைப்பது புத்திசாலித்தனம் ஆகிவிட்டதால் நேர்மையாக வாழ்பவன் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான்.
உங்கள் மீது அன்பு கொண்டவர்களை விட்டு அதிக தூரம் சென்று விடாதீர்கள். திரும்பி வருவதற்கு நிச்சம் பாதைகள் இருக்காது.
ஏமாளியாக இருப்பது அவமானம் இல்லை ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாமல் இருப்பதே நமக்கு பெருமை!
இஎவ்வளவு முறை காயப்பட்டாலும், எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதை ஏற்று கொள்ளவே முடியாது!
அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை; அன்பை வைத்து ஏமாற்றியவர்கள் இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை.!
அன்பை புரிந்து கொள்ளாததை விட வேதனையானது அன்பை தவறாக புரிந்து கொள்வது.
நீ சென்ற பாதை யாவும் மனம் தேடுகிறது! நீ திரும்பி வர மாட்டாயா என!
எவ்வளவுதான் நேசிக்க பல காரணங்கள் ஏற்படுத்தினாலும், சில சமயங்களில் நிதானம் தவறிய கோப வார்த்தைகள், மிகுந்த வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது வாழ்கையில்!
எவ்வளவு தான் கதறி அழுதாலும் அன்பால் ஏமாற்றப்பட்ட வலிகள் மட்டும் குறைவதே இல்லை.
ஏமாற்றம் என்பது வேறு ஒன்றுமில்லை இனி அடுத்தவரிடம் எச்சரிக்கையாய் பழக ஓர் அலாரம்!
ஏமாற்றம் என்பது வேறு ஒன்றுமில்லை, இனி அடுத்தவரிடம் எச்சரிக்கையாய் பழக ஓர் அலாரம்!
ஒரு உண்மையான அன்பை எந்த காரணமும் இல்லாமல் நிராகரிப்பதை விட கொடிய வன்முறை இந்த உலகில் இல்லை.
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் எந்த உறவிடம் இருந்தும் எதையும் எதிர் பார்க்காதீர்கள்.
சிலர் மீது கொண்ட அன்பில் எத்தனை முறை காயப்பட்டாலும் மனமோ கேட்காது. அதுவே எல்லை மீறிய அன்பு.
கத்தியால் குத்தினால் கூட ஒரு நிமிடம் தான் வலி! ஆனால் அன்பை காட்டி ஏமாற்றினால் ஒவ்வொரு நிமிடமும் "வலி" தான்.

உண்மையாய் இருக்கணும் என்பதில் ஜெயித்து விடுகிறேன். ஆனால் அதே உண்மையை எதிர்பாக்கும் போது தோற்றுவிடுகிறேன்...!

ஏமாற்றம் எனக்கு புதிதல்ல... நான் ஏமாறும் விதம்தான் நாள்தோறும் புதிதாய் இருக்கிறது. 'சில நேரம் அன்பால்.. சில நேரம் நம்பிக்கையால்..

நான் உன்னிடம் ஏமாந்து விட்டேன் என்பதில் வருத்தம் இல்லை ! உன்னை யார் ஏமாற்ற போகிறார்களோ என்பதில் தான் எனக்கு வருத்தமே..!

ஏமாற்றம் வழியைதந்தாலும் நல்வழியையும் காட்டும் வாழ்க்கைக்கு

சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட சிரித்து விட்டு கடந்து செல்வதே சிறந்தது..

ஆயிரம் மாற்றம் வந்தாலும் மாறாமல் வரும் மாற்றம் ஏமாற்றம்...
எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல.
உண்மையானவர்கள் யார். போலியானவர்கள் யார் என்பதை காலம் உங்களுக்கு புரிய வைக்கும்.
மறுக்க முடியாத மூன்று உண்மைகள்! அன்பாய் இருந்தால் ஏமாளி, உண்மையாக இருந்தால் முட்டாள், நடித்தால் மட்டுமே நல்லவன்!
பேச வேண்டாம் என முடிவு எடுத்த பின்பும் நீயாக பேச மாட்டிய என ஏங்கும் மனதிற்கு பெயர் தான் அன்பு.
பழகிய மிருகங்களிடம் இருக்கும் நம்பிக்கையும் உண்மையும் சில மனிதர்களிடம் இருப்பதில்லை.
நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும். அன்று புரியும், நீ ஏமாற்றியது அவர்களை அல்ல, உன்னையே என்று.
போலி உறவுகளுக்கு நீங்கள் பிளாஸ்டிக் போல.. பயன்படுத்தி முடித்தால் குப்பைத் தொட்டியில் வீசி விடுவார்கள்.
இன்று நீ எனக்கு செய்த துரோகத்தின் வலி, நாளை நீ நம்பிய ஒருவர், உன்னை ஏமாற்றும் போது அதன் வலி உனக்கு புரியும்!
உண்மையாய் இருக்கணும் என்பதில் ஜெயித்து விடுகிறேன். ஆனால் அதே உண்மையை எதிர்பாக்கும் போது தோற்றுவிடுகிறேன்...!
ஆயிரம் மாற்றம் வந்தாலும் மாறாமல் வரும் மாற்றம் ஏமாற்றம்...
ஏமாந்து போவதிற்கு முட்டாளாய் இருக்க வேண்டும் என்றில்லை அன்புக்கு ஏங்கியவராக இருந்தால் போதும்..!!
ஏமாற்றம் வலியைதந்தாலும் நல்வழியையும் காட்டும் வாழ்க்கைக்கு...
ஒரு போலி வாக்குறுதியை விட தெளிவான நிராகரிப்பு எப்போதும் சிறந்தது.
சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட சிரித்து விட்டு கடந்து செல்வதே சிறந்தது..
நீ ஒருவனை ஏமாற்றி விட்டதால் அவனை முட்டாள் என்று நினைக்காதே நீ ஏமாற்றியது அவன் உன் மேல் வைத்த நம்பிக்கையை...
அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்!!
உண்மையாய் இருக்கணும் என்பதில் ஜெயித்து விடுகிறேன் ஆனால் அதே உண்மையை எதிர்பார்க்கும் போது தோற்றுவிடுகிறேன்.
ஏமாற்றம் ஒன்றும் புதிதல்ல ஏங்கிதவிக்கும் இதயத்திற்கு ஏமாற்றும் விதம் தான் புதிது..!
கனவுகள் கலையும் வேளையில் உணர்ந்தேன், என் நினைவுகளும் என்னை ஏமாற்றும் என்று!
எதுவும் சில காலம் தான் எதிர் பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் பெரிதாக தெரியாது..!
எதிர்பார்ப்புகள் பெரிதாக இருந்தால் ஏமாற்றங்கள் வலிக்கத்தான் செய்யும்...
ஆறுதல்களைத் தேடி உருவான ஏமாற்றம் தான் ஏராளம்,தனது வாழ்வியலை இழந்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு...
சில ஏமாற்றங்களை கடந்த பின் தான் எதிர் பார்க்கும் ஒன்று கிடைத்து விடும் என்றால் ஏமாறவும் கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிகிறது.
எதுவுமில்லை என்ற வார்த்தையில்... எது இருக்கிறதோ இல்லையோ ஏமாற்றம் இருக்கும்..!!
ஏமாற்றம் கவிதைகள்
ஏமாற்றம் கவிதைகள் ( Ematram Kavithaigal ) | மனிதர்களின் வாழ்க்கையே ஏமாற்றம் மற்றும் நம்பிக்கையின் மூலம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒளியும் இருளும், இன்பமும் துன்பமும், போராட்டமும், அமைதியும், வறுமையும், செல்வமும், வாழ்வும், தாழ்வும், அறிவும், அறியாமையும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் , நம்பிக்கையும் கலந்தது தான் இந்த உலக வாழ்க்கை. வெற்றியைத் தாங்கும் தூண்களாக தோல்விகள் உள்ளன. அதில் நம்பிக்கையும், ஏமாற்றமும் தான் குடியிருக்கின்றன. ஏமாற்றங்கள் என்ற மாற்றங்களை வாழ்வில் சந்தித்தவர்கள் பலரும் மாபெரும் சாதனைகளைப் படைத்தவர்கள். படைத்துக் கொண்டிருப்பவர்கள்.
வாழ்வில் எதிர்மறையாக நடந்தவற்றையே மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள். எத்தனை விரைவாக அதிலிருந்து மீள முடியுமோ முயற்சி செய்யுங்கள். சோகமான மனோநிலையிலிருந்து மனதை மாற்ற நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் நம் கவனத்தை திசை திருப்பலாம். நெருங்கிய நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ நேரத்தை செலவிடுவதும் ஏமாற்றங்களை மறக்க உதவும். தவறு என்பதும் நிகழக்கூடிய ஒன்றுதான் வாழ்வில் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை. எல்லா நேரங்களிலும் ஒருவர் புத்திசாலித்தனமாக செயல்படுவது சாத்தியமும் இல்லை. அதனால், தவறு என்பது நாம் செய்த தவறை நினைத்து வெட்கப்பட்டும், வருத்தப்பட்டும் பயனில்லை. தன்னம்பிகை தரும் கட்டுரைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றில் கவனத்தை செலுத்தலாம். அதன்மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்க முயற்சியுங்கள். பல வாய்ப்புகள் நம் முன்னே கொட்டிக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு, இடையில் குறுக்கிடும் தடைகளைத்தாண்டிய உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும். ஏமாற்றம் பற்றிய கவிதைகள் இங்கே "ஏமாற்றம் கவிதைகள்" (Ematram Kavithaigal) என்ற தலைப்பில் இங்கே படித்து மகிழுங்கள்.