கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

காத்திருப்பு கவிதைகள்

காத்திருப்பது கூட சுகம்தான் நமக்காக எனும்போது

காத்திருப்பு கவிதைகள்

காதலில் காத்திருப்பு என்பது ஒரு சுகமானது. சுகமான காத்திருப்பு என கூறினாலும் ஒவ்வொரு நிமிடம் தாமதிக்கும் போதும் மரண வலியை உணர்த்துகிறது. காதலனுக்காக காதலியோ காதலிக்காக காதலனோ காத்துக்கிடக்கிற ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு ஒரு யுகமாகத் தோன்றும். ஆனால் சந்தித்த பிறகு நேரம் அத்தனை வேகமாகக் கரையும். காதல் தோல்வியுற்ற பிறகு காத்திருப்பு என்பது வேதனையானது. இந்த காத்திருப்பு கவிதைகள் ( Kathiruppu Kavithaigal ) படித்து ரசித்து உள்ளம் உருகிடுவீர்.

காலம் நம்மை சேர்க்காவிட்டாலும் காலம் கடந்து காத்திருப்பேன் உன் காதலுக்காக...

ஒவ்வொரு முறையும் கர்ப்ப வேதனைதான் காத்திருந்த என் கண்கள் உன் உருவைப் பிரசவிக்கும் வரை…

உனக்கான காத்திருப்பு கணங்கள் மணிகளானது நாட்கள் வாரங்களானது!

என்று வருவாய் என ஏக்கங்கள் நிறைந்து படி இன்னும் காத்திருக்கு!

இருந்தும் தொடர்கிறது உனக்கான காத்திருப்பு மீதமுள்ள உயிரோடு!

நான் காத்திருப்பது, உன் தேவைக்காக அல்ல! நீயே தேவை என்பதால்!

பல்லாயிரம் அழகிகளை கடந்து சென்றாலும், என் தேவதை உனைத்தவிர யாரையும் என் கண்கள் பார்ப்பதும் இல்லை, தேடுவதும் இல்லை!

நம் இருவருக்கும் இடையில் தூரங்கள் எவ்வளவு இருந்தாலும் நம்முடைய அன்புக்கு முன்னாள் அவை பெரிதல்ல

தொலைதூர காதலில் அன்பு பாசத்தை காட்டிலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையே பெரியது

இன்னும் பழமை மாறாமல் அதே பொலிவுடன் அந்த இடம் . இதோ அதே மழை அதே ஒற்றைக் குடை ஆனால் நீ அருகில் இல்லை..!

நம் இருவரின் இடைவெளி தூரமாக இருந்தாலும் நம் இதயத்தின் இடைவெளிக்கு தூரமே இல்லை

வெகு நேரம் காத்துக் கிடந்தேன் நீ வரவில்லை . அன்று உன்னையும் என்னையும் ஒன்றாய் நனைத்த இந்த மழையில் இன்று நான் மட்டும் தனிமையில் நனைகிறேன்...!

பிடித்தவர்கள் அருகிலேயே இருந்து விட்டால் பிரிவின் வலியும் நினைவுகளின் அருமையும் தெரியாது

காலமெல்லாம் அவளுக்காக காத்திருப்பேன்..!! என் காதல் கைகூடும் என்ற நம்பிக்கையில் அல்ல; என்றாவது ஒருநாள் அவள் கண்கள் என்னை தேடும் என்ற நம்பிக்கையில்..!!

காலங்கள் கடந்து சந்திக்கின்ற காதலுக்கு அன்பற்கான எதிர்பார்ப்பு சற்று அதிகமாக தான் இருக்கும்

எனக்கான காதலை நீ உணரும் நொடி உனக்காக நான் காத்திருப்பேன் என மறவாதே…

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

எனக்கென யாரும் வரப்போவதில்லை என தெரிந்தும் யோரோ ஒருவருக்காக காத்திருக்கிறது என் இதயம்..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

நீ என் இதயத்தில் இருப்பது அறியாது என் கண்கள் உன் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது ...!!!

kadhal kavithaigal | Best love quotes in tamil

ஒவ்வொரு நாளும் காத்து கொண்டு தான் இருக்கிறேன்.. முன்புபோல என்னிடம் வந்து பேசுவாய் என்று...!!!

kadhal kavithaigal | Best love quotes in tamil

காலம் காத்திருப்பதில்லை ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயம்.. நமக்காக நிச்சயம் காத்திருக்கும் ..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

எவ்வளவு தொலைவில் இருந்தாலும் உன் நினைவுகள் மட்டும் என்னை தொல்லை செய்து கொண்டே இருக்கிறது..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

தூரமாய் இருப்பதும் ஒரு காரணம் தான் உன் மீதுள்ள அளவில்லா அன்பை அறிந்து கொள்ள

மேலும் பார்க்க

நிராகரிப்பைக் காட்டிலும் பதில் தெரியா காத்திருப்பு இதமானது... ...

உன்னோடு சேர காத்திருக்க வேண்டுமென்றால் கோடி யுகம் வரை காத்திருப்பேன் நான்

ஆயுள் முழுவதும் அவளுக்காக காத்திருக்க நான் தயார்..! மரணம் போல அவளும் நிச்சயமாய் வருவாள் என்றால்..!!

கரையருகே நீயிருப்பதை அறிந்தபின் கடல் கடக்கும் நேரமதில் காத்திருப்பது கூட சுகம்தான்!!

காத்திருக்கிறேன் சில மணி நேரங்கள் அல்ல வருடங்கள் பல முகமறியா என்னவனுக்காக

காத்திருக்கச் சொல்லிவிட்டு கடந்துவிட்டாய்.. பெண்பார்த்துச் சென்றவனின் கடிதம்போல உன் வரவை எதிர்நோக்கியே வயதாகிப் போகிறது காதலுக்கு !

என் கவிதைகள் அவளது காதலை கரம் பிடிக்க காத்திருக்கிறது.

தெருவிளக்குகளை போல் இரவை ரசிக்க வழிமேல் விழிவைத்து காத்திருக்க தொடங்கிவிட்டேன்...

காத்திருப்பு கவிதைகள் ( Kathiruppu Kavithaigal )

காத்திருப்பு கவிதைகள்

காத்திருப்பு கவிதைகள் ( Kathiruppu Kavithaigal ) : நம் பிறப்பே தாயின் பத்துமாதக் காத்திருப்பினால் தானே நிகழ்ந்திருக்கிறது! தெரிந்தோ தெரியாமலோ பிறக்கக் காத்திருந்தது போல இறக்கவும் காத்திருக்கிற இடைப்பட்ட காலத்தைத் தான் நாம் வாழ்க்கையென்று கருதிக்கொண்டிருக்கிறோம். இருக்கிறோம் என்று நம்பிக் கொண்டிருக்கிற நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும் நமக்கே தெரியாமல் நாம் ஒரு காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறோம் என்று.

காத்திருப்பு வலியா சுகமா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது. காதலனோ காதலியோ வருவாளெனக் காத்திருப்பது சுகம், அதுவே அவள் வரமாட்டாளென தெரிந்தும் காத்திருப்பது வேதனையானது. சிலர் அதைச் சுகமாகக் கருதுவதுண்டு. பலருக்கு அது சுமையாகத் தோன்றுவதுண்டு. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காத்திருத்தலை நாம் அவ்வப்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒருதலை காதல் கூட ஒரு சுகம் தான். தான் காதலிக்கும் ஆணோ பெண்ணை தினமும் ஒரு வழியை கடந்து செல்வார்கள் என்றால் அந்த வழியில் பல மணி நேரமாக காத்திருப்பார்கள் ஒருதலை காதலர்கள். தான் காதலிப்பவர்களின் முகத்தை கண்ட பிறகே அவர்கள் முகத்தில் புன்னகை பூக்கும். ஆனால் இதில் சோகம் என்னவென்றால் இவர்கள் காதலிப்பது கூட அவர்களுக்கு பல நேரங்களில் தெரியாது. பொன்னான பல மணி நேரத்தை ஒரு பெண்ணிக்காகவோ ஆணிற்காகவோ எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செலவிடும் இவர்கள் கூட ஒரு வகையில் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தான். இவர்களின் காதல் பல நேரங்களில் ஒருதலை காதலாகவே இருந்து மறைந்து போகும். காத்திருப்பு பற்றிய கவிதைகள் இங்கே "காத்திருப்பு கவிதைகள்" (Kathirippu Kavithaigal) என்ற தலைப்பில் இங்கே படித்து மகிழுங்கள்.