கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ் இனத்துக்கும் உயிரோடு இணைந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  | Tamil New Year

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள், புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியாவில் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புது வருடம் வரவேற்கப்படுகிறது. உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பிற்குரிய அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க புத்தாண்டு வாழ்த்து கவிதைகள், படங்கள் இதோ இந்த பதிவில் உங்களுக்காக!! இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும்,நலமும் பெற வேண்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம்
இனிதே உதயமாகட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

இந்தாண்டு உங்கள் வாழ்வில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிரம்பட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் ... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்....!

புத்தாண்டு வாழ்த்துகள்! எனது நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் கொண்டு வரட்டும்.

இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

புதிய ஆண்டு அனைத்து மகிழ்ச்சியையும் நற்செய்தியையும் உங்களுக்கு புதுப்பிக்கையில், உங்கள் இதயத்தில் என்றென்றும் சந்தோஷம் ஒளிரும் என்று நம்புகிறோம். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

எல்லாமே நல்லதுக்கான துவக்கமே.. இந்த துவக்கம் நன்மையாய் செல்லட்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

நாம் விரும்பியது எல்லாம் கிடைத்து, மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

புதுமைகள் தொடர்ந்து, மாற்றங்கள் மலர்ந்து, இசை முழங்க எல்லோரும் வரவேற்ப்போம் தமிழ் புத்தாண்டை

இந்த புத்தாண்டு நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சியான வளமான தெய்வீக ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த நாளை உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் கொண்டாடுங்கள், இது புத்தாண்டை வரவேற்கும் நேரம்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: இந்த ஆண்டு நீங்கள் கனவு காணும், விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நம்பிக்கைதான் வாழ்க்கை. மனதில் மகிழ்ச்சி அதிகரித்தால் நம்பிக்கை அதிகரிக்கும் ஆரோக்கியம் அதிகரித்தால் ஆயுள் நீடிக்கும். இந்த தமிழ் புத்தாண்டு நன்னாளில் நம்பிக்கையும் ஆரோக்கியமும் அதிகரிக்க செந்தழிழைப் போல நீண்ட ஆயுளோடு வாழ மகிழ்வான தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

வெற்றிகள் பதியட்டும், தோல்விகள் தேயட்டும் புன்னகை பூக்கட்டும், முயற்சிகள் முளைக்கட்டும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

பழையவை மறப்போம், புதியவை புகுவோம் கவலையை மறப்போம், மகிழ்ச்சியால் மனதை நிறைப்போம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

இந்த ஆண்டு அனைவருக்கும் தடை கற்களை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக அமையட்டும்... தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!!

kadhal kavithaigal | Best love quotes in tamil

என் இனிய நட்புகளுக்கும் என் இனிய உறவுகளுக்கும் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

இருளை நீக்கி ஒளியை அருள தமிழ் மகளே வருக புத்தாண்டில் புத்தொளி தருக இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

வந்திருக்கும் சித்திரையை மக்களல்லாம் மகிழ்ச்சியோடு வரவேற்போம் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

மேலும் பார்க்க

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியம், செல்வ செழிப்புடன் அருள்புரிவானாக.

வாழ்கையை கொண்டாடுங்கள் புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள் உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டு திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்குள் நுழையட்டும், வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இது தமிழ் புத்தாண்டு சந்தோசத்திற்கும் கொண்டாடதிற்குமான தருணம் இது குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள் இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்கு மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்

அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் நிறைந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இந்த புத்தாண்டு அனைத்து துன்பங்களையும் முடித்து ஒளியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது மீண்டும் சோலை கொழுந்து விட்டது இதயம் இதயம் மலர்ந்து விட்டது இசையின் கதவு திறந்து விட்டது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் வருக புத்தாண்டே

புத்தாண்டில் புதிய சிந்தனை புதிய முயற்சி புதிய எண்ணங்கள் பூக்கட்டும் நட்புகளுக்கும் சொந்தங்களுக்கும் தமிழ் இனத்துக்கும் உயிரோடு இணைந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ( Tamil New Year )

Tamil New Year

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ( Tamil New Year ): "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி" என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள், சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்! ". சூரியனை அடிப்படையாக வைத்து தங்களின் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர் தமிழர்கள். தமிழ் புத்தாண்டு அன்று இறை வழிபாடுகளில் ஈடுபடுவதும் உங்களை மென்மேலும் வளர செய்யும். ஒரு வருடத்தில் மொத்தம் 12 மாதங்கள், அதனை அடிப்படையாக கொண்டு சித்திரை மாதமே தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமாக உள்ளது.

இயற்கை சார்ந்து விழா கொண்டாடும் மக்கள் சித்திரைத்திருநாள், தமிழ் வருடத்தின் புதிய தொடக்கமாகக் கருதி கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. தை மாதத் தொடக்கமும், ஆவணி மாதத் தொடக்கமும் கொண்டாடப்பட்டதாக ஒவ்வொரு காலகட்டத்திலும் மேற்கோள்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆயினும் பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகான காலகட்டத்தில் சித்திரை மாதம் முதல்நாள் கொண்டாட்டத்திற்குரிய நாளாகவும், பிற்காலங்களில் சித்திரை மாதப்பிறப்பு தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பதிவில் தமிழர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் “தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” கவிதைகளை காணலாம்.