கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் உண்மையான அன்பு அம்மா கவிதைகள் அப்பா கவிதைகள் காதல் கவிதைகள் உயிர் நட்பு கவிதைகள் தன்னம்பிக்கை கவிதைகள் வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி பொய்யான அன்பு சோக கவிதைகள் காதலர் தின வாழ்த்துகள் ஏமாற்றம் கவிதை வரிகள் காத்திருப்பு கவிதைகள் தனிமை கவிதைகள் கோபம் கவிதைகள் உறவுகள் கவிதைகள் பெண்கள் கவிதைகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள் காலை வணக்கம் கவிதை வரிகள் இரவு வணக்கம் கவிதை வரிகள்

வாழ்த்து

காதலர் தின வாழ்த்துகள் பிறந்தநாள் வாழ்த்து திருமண நாள் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பொங்கல் வாழ்த்துகள் தீபாவளி வாழ்த்து கவிதைகள் அன்னையர் தின வாழ்த்துகள்

திருமண நாள் வாழ்த்து

இரண்டு உயி ர்கள் ஓர் உயிராக இணைந்து மணமுடிக்கும் திருநாளே திருமணம். இன்று திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் திருமண நாள் வாழ்த்துகள்

திருமண நாள் வாழ்த்து

  | Wedding Anniversary Wishes

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள் ஆகும். திருமண வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது. திருமண நாளின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் தம்பதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். இந்த தொகுப்பு திருமண நாள் வாழ்த்து கவிதை பற்றியது. கணவன் மனைவி எனும் உன்னதமான உறவின் தொடக்க நாளான இந்த நாளை "திருமண நாள் வாழ்த்து" ( Wedding Anniversary Wishes ) கவிதை மூலம் வாழ்த்துங்கள்.

வாழ் நாள் எல்லாம் இதே நெருக்கம், அன்பு, மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் மனமார்ந்த..! இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!

என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாள்பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும். என் இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள்.

இன்று திருமண நாள் காணும் அன்பு தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

நீங்கள் இருவரும் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

இமை போல் வாழ்ந்து இமயம் போல் வளர்ந்து என்றும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துகின்றேன்..! என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

இணை பிரியாது இருந்து இனி வரும் நாட்களில் இன்பமாய் இருந்திட என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை தருகிறீர்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள்!

பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால் உன் இலக்கும் அவள் பயணமும் ஒன்றாகும்! ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது!

அழகான வாழ்க்கை இது.. அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக..! இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

கையோடு கை சேர்த்து இணைந்த இதயங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!

உங்கள் வாழ்க்கை ஒளி போல ஒளிரட்டும் உங்கள் திருமண நாளில் உங்கள் வாழ்க்கை என்றும் சிறப்பாக இருக்க..! என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்..!

கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்! திருமண நாள் வாழ்த்துகள்!

அன்பென்னும் குடை பிடித்து.. மண்ணின் மனம் மாறாமல் நீங்கள் நிலைத்து என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ.. எனது வாழ்த்துகள்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!

குறையாத அன்பும், புரிந்து கொள்ளும் அன்பும், விட்டுக் கொடுக்காத பண்பும் கொண்டு பல்லாண்டு வாழ்க.. என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்.

உங்கள் ஆண்டுவிழாவில் உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்களை அனுப்புவது, இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கலாம்!

மேலும் பார்க்க
kadhal kavithaigal | Best love quotes in tamil

இணை பிரியா தம்பதியினராய் நூறாண்டு காலம் வாழ்க..!! திருமண நாள் வாழ்த்துகள்..!

kadhal kavithaigal | Best love quotes in tamil

ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடந்து வளர என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கம், அன்பு, மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்...!

kadhal kavithaigal | Best love quotes in tamil

நீங்கள் இருவரும் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனைப் பிராத்திக்கிறேன் இனிய திருமண நாள் வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

இரு உள்ளங்களும் ஒன்று சேர்ந்து குறையாத அன்புடனும் காதலுடனும் நீண்ட காலம் வாழ்க இனிய திருமணநாள் வாழ்த்துகள்

kadhal kavithaigal | Best love quotes in tamil

பிறப்புக்கும் இறப்புக்குமிடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும் பயணங்கள் இணைத்திடும் உயிர்களின் இணைவு திருமணம் திருமண நாள் வாழ்த்துகள்

மேலும் பார்க்க

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும் பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்..! என்றும் இன்பத்தோடு வாழ என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

நேசங்கள் நீர் போல குவிந்து.. சொந்தங்கள் கடல் போல இணைந்து என்றென்றும் உங்கள் அரவணைப்பில் இணைந்து வாழ எனது வாழ்த்துகள்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!

அத்தனையும் மறந்துபோக வைத்த அன்பானவன் தான் திருமண பரிசளிக்கிறான் எனக்கு அவன் எனக்கு கிடைத்து விட்டதை மறந்து.!

தினமும் பூத்து மகிழும் பூக்கள் போல என்றுமே புன்சிரிப்போடும் பாசமும் நேசமும் அளவில்லாமல் நிரம்பி உங்கள் தாம்பத்ய வாழ்க்கை என்றுமே புத்தம் பொலிவுற வாழ்த்துகிறேன்.

எங்கோ பிறந்து வாழ்ந்த இரு இதயங்களை இணைந்து ஒன்றாக இருவரின் வாழ்க்கைக்குள் ஒரு புது உதயம் தரும் சிறந்த தினமே திருமண நாள்..

இருவரும் இணைந்த இந்த சிறந்த நாளில் என்றும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்க உளதார வாழ்த்துகின்றேன்..! இனிய திருமண நாள் வாழ்த்துகள்..!

தெளிந்த நீராய் தெளிந்த நீராய் உங்கள் எண்ணங்கள் ஓட.. எதிலும் தடையில்லாமல் எங்கும் ஜெயிக்க.. தலைக்கனம் இல்லாமல் தவழ்ந்து போக எனது வாழ்த்துகள்.! இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!

இரு வேறு செடிகளாய் வளர்ந்து உங்கள் வாழ்வில் திருமணம் என்னும் ஒரு வேரில் உறவு எனும் பூ பூத்து அன்பு என்னும் காய் காய்த்து சந்தோஷம் என்னும் கனி தந்து எழில் கொஞ்சும் சோலையாய் வாழ வாழ்த்துகிறேன். இனிய திருமண நல்வாழ்த்துகள்.

திருமண நாள் வாழ்த்து (Wedding Anniversary Wishes)

Wedding Anniversary Wishes

திருமண நாள் வாழ்த்து ( Wedding Anniversary Wishes ): திருமண நாள் என்று சொன்னாலே, பலருக்கும் உற்சாகமும், ஆனந்தமும் மனதினுள் வந்து விடும். அது எப்போதும் நினைவகத்தில் இனிமையான நினைவுகளாக நிலவி வருகிறது என்னதான் கணவன் மனைவிக்குள் சில ஊடல்கள் இருந்தாலும், அதுவும் வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றது. ஒவ்வொரு தம்பதியரின் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான திருமண நாளை நினைவுபடுத்தி மகிழ்வதற்காக இந்த இனிமையான நாள் கொண்டாடப்படுகிறது.

சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக நமக்கு முக்கியமான தோழன் அல்லது தோழி, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சில நெருக்கமான நபர்களது திருமணத்திற்கு நாம் செல்ல முடியாமல் இருக்கும் பட்சத்தில் திருமண வாழ்த்து கவிதை நாம் அனுப்பி நமது சந்தோசத்தை வெளிக்காட்டலாம். இன்று திருமண நாள் காணும் உங்கள் நண்பன்/தோழி/சகோதரன்/சகோதரி/உறவினர்/கணவன்/மனைவி/ காதலன்/காதலி -க்கு வாழ்த்துக்களை Whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் பகிர்வதற்காக திருமண நாள் வாழ்த்து கவிதைகள் மற்றும் படங்கள் இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன இதனை உங்கள் அன்புக்குரியவருக்கு பகிர்ந்து அவரை உற்சாகப்படுத்துங்கள்!