பெண்கள் கவிதைகள்
இந்த பதிவில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட “பெண்கள்-கவிதைகள்” பதிவை காணலாம்.
பெண்கள் கவிதைகள்
| Pengal Kavithaigalஇன்றைய பெண்கள், ஆண்களுக்கு இணையான வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார சுதந்திரம் போன்றவற்றை பெற்றிருக்கிறார்கள். இன்றைய நவீன உலகில் பெண்கள் சாதனை படைக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனையும் போற்றப்படுகிறது. பெண்களை சக்தி என்றான் பாரதி. இன்று பெண் சக்தி என்பது நாட்டின் முதுகெலும்பாய், மூச்சுக் காற்றாய், முகமாய் மாறி இருக்கிறது. ஆனால், இன்றும் பெண்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த பதிவில் “பெண்கள் கவிதைகள்” பதிவை காணலாம்.
ஒவ்வொரு பெண்ணின் கடின உழைப்புக்கு பின்னாலும் பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கின்றான்..!
நாள் முழுவதும் சக்கரம் போல் ஓயாமல் சுழன்று வேலை செய்து வரும் பெண்கள் அனைவருமே போற்றப்பட வேண்டிய நடமாடும் தெய்வம் தான்.
அதிகாலை எழுவதில் எந்நாளும் வெற்றி.. அடுத்த நொடி சுறுசுறுப்பு கடைசி வரை விறுவிறுப்பு உமையாள் உமக்கே சாத்தியம்.. பெண்ணிற்கு ஆண் இணையல்ல இது சத்தியம்..
பெண்தானே என்று தாழ்வாக நினைக்காதே.. அவள் அங்கீகரிக்காவிட்டால் உன்னை ஆண்மகன் என்று உலகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது..!
யார் சொன்னது பெண் தேவதைகள் நேரில் இல்லையென்று இதோ காண்கிறேன் நான் தினமும் என் அம்மாவின் உருவத்தில்.
ஏழையாக இருந்தாலும் எதையும் எதிர் கொள்வாள்.. எதிர் பார்த்து ஏங்க மாட்டாள்… பாசத்தை தைத்து பண்பை விதைத்து அன்பை நிறைத்து அகிலத்தை காத்திடும் விருட்சம் பெண்..
நடப்பது நம் கையில் இல்லை நாம் நினைத்தாலும் நடக்குமா என்று நினைப்பதற்கு முயற்சியை நினைவில் வைத்து கடந்து செல்..
பெண்கள் சந்தோஷமா இருந்தா அவுங்க பேசுறத யாராலும் நிறுத்த முடியாது.. சோகமா இருந்தால் அவுங்கள யாராலும் பேச வைக்க முடியாது..!
உதிரத்தை உணவாக்கி, தன் பிஞ்சை உயிராக்கிடுவாள்.. தன் நெஞ்சை திடமாக்கி தாயாராக தயாராவாள்… திரும்புவோமோ மாட்டோமோ விரும்பியே துணிந்திடுவாள்…
கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண்.. பிடித்தவர்களிடம் மட்டும்..!
பொட்ட புள்ள பொறந்திருச்சே என்று வருத்தப்படும் தகப்பனுக்கு தெரிவது இல்லை தன் கடைசி காலத்தில் தன்னை பார்த்து கொள்ள இறைவன் அனுப்பி வைத்த வரம் தான் “பெண் ” என்று.
எவ்வலிமை ஆடவனும் வெல்ல முடியுமா பிரசவத்தை… ஏன் பிரசவம் தெரியுமோ.. இன்னும் ஒர் உயிர் தவமாய் பிறக்கலாம்… இருக்கும் உயிர் சவமாய் துறக்கலாம்….
சுமைகளை உதறி சரித்திரம் படைக்க வா சிலுவையை உடைத்து சிகரத்தை தொட்டிட வா வன்மையை விரட்டி பெண்மையைக் காக்க வா
தன்னை விட தனது வாழ்க்கை துணைக்கு அறிவும் திறமையும் அதிகம் என்று தெரிந்த பின்.. பெண் சந்தோசம் கொள்கிறாள்.. ஆண் சந்தேகம் கொள்கிறான்..!
தெய்வங்களை கோவிலில் தெருவில் தேடாதீர்கள்… ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள்… தாயாய், மகளாய், தமக்கையாய், தோழியாய், மனைவியாய்…
ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம்மீது பழி சொன்னாலும் தவறு நம் மீதே இருந்தாலும் நம்மை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடும் உறவுக்கு பெயர்தான் மனைவி..!
தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் ஆயிரம் கவலைகளை மனதில் அடக்கி கொண்டு எதுவுமே நடக்காதது போல வேளியே புன்னகைத்து வாழ்பவர்கள் தான் பெண்கள்..!
ஆண் என்ற அகங்காரம் கொள்வதற்க்கு முன்னாள் யோசி. முதலில் உன்னை ஒரு பெண் பத்து மாதம் சுமந்து பெற்றாலே நீ ஒரு ஆண் மகன்..!
பெண்கள் சந்தோசமாக இருந்தா அவங்க பெசுறத யாராலும் நிறுத்த முடியாது சோகமா இருந்தால் அவங்கள யாரலும் பேச வைக்க முடியாது
ஒரு பெண் திமிராக இருப்பதற்க்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான அன்பான குணமே காரணம்..!
ஒரு பெண்ணுடைய அழுகையின் உச்சம் தான் ஆணவம்... அவளின் ஏமாற்றத்தின் உச்சம் தான் திமீர்... துரோகத்தின் உச்சம் தான் தெனாவட்டு...
யாரும் துரத்தாமலே ஓடுவதும் எதையும் தொலைக்காமலே தேடுவதும் தான் பெண்களின் வாழ்க்கை ...
பெண்களுக்கு வீரமான ஆண்களை விட.. அன்பான ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!
கிடைத்த ஒரே வாழ்வையும் தனக்காய் வாழா உன்னத உயிர்… பெண்..
தனக்கே வலித்தாலும் தன்னை நேசித்தவர்களுக்கு வலிக்க கூடாது என்று நினைப்பது தான் பெண்களின் குணம்..!
பெண்களுக்கு மரியாதை கொடுங்கள்.. உங்கள் அம்மா பெண் என்பதால் இல்லை நீங்கள் சிறந்த ஆண் என்பதால்..!
பெண்களின் மனதை அறியும் நூல் எந்த நூலகத்திலும் இல்லை அவளை காதலித்தவனை தவிர..!
கடவுள் எழுதிய கவிதை பெண்.. ஆனால் அந்த கவிதையை தினமும் வர்ணிப்பது ஒரு ஆண்..!
நட்பாய்,காதலாய்,வீரமாய், பக்தியாய், சாதனையாய்,சரித்திரமாய் ஆண்டாண்டு காலமாய் வீற்றிருப்பது பெண்மை
பெண்ணாய்ப் பிறந்தது உழைத்து மடிவதற்கேவெனும் எண்ணத்துடன் வாழ்வதுதான் எங்கள்நிலையோ..!
பெண்கள் கவிதைகள்
பெண்கள் கவிதைகள் ( Pengal Kavithaigal ): பெண்களின் சாதனை மண்ணுலகம் மட்டுமன்றி விண்ணுலகம் வரை பரந்துள்ளது. உலகளாவிய ரீதியில் பல்வேறு பெண்கள் சாதனைப் பெண்களாக திகழ்கின்றனர். அவர்கள் அனைவரும் போற்றுதற்கு உரியவர். பெண்கள் நாட்டின் கண்களாவர். பெண்ணின் பெருமையை உணர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெண்கள் பெரும் பங்காற்றுகின்றனர் எனினும் சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது குறைவாகவே காணப்படுகின்றது. இன்றைய காலப்பகுதியில் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு பெண்களின் வளர்ச்சி அமைந்திருக்கின்றது.
ஆனாலும் தினம்தோறும் பெண்களுடைய வாழ்வு வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் பல வெவ்வேறுபட்ட சவால்களுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இன்று பரவலாக பெண்விடுதலை மற்றும் பெண்ணுரிமை குறித்து பேசப்பட்ட போதிலும் அது அறிவுபூர்வமான மற்றும் அனைத்து வகைகளிலும் தெளிவான அம்சமாக அடிமட்ட மக்கள் மத்தியில் சென்றடையவில்லை என்றே குறிப்பிடமுடியும். பெண்கள் மீது தொடுக்கப்படும் துன்புறுத்தல், ஏற்றத்தாழ்வு மற்றும் சமுதாயத்தின் பல துறைகளில் பெண்களின் குறைவான பங்களிப்பு என தீர்வற்றவையாக தோற்றமளிக்கும் பல்வேறு பிரச்சனைகள், பெண்களிற்கு மனச்சோர்வையும் துயரத்தையும் கொடுப்பவையே. இவ்வாறான பிரச்சினைகள் குடும்ப அங்கத்தவர்களாலும், உறவினர்களாலும் அதிக அளவில் ஏற்படுத்தப்படுவதோடு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் பிரச்சனைகளும் ஏராளம். இன்றைய சமூகச் சீர்கேடுகளைக் களைய வேண்டும் எனில், பெண்களை மதிக்கின்றவர்களாக ஆண் பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும். புதிய உயிரை உலகிற்குக் கொண்டுவருவதற்கு உயிரையும் பனையம் வைக்கின்றாள் பெண். இத்தகைய பெண்மையை என்றென்றும் போற்ற வேண்டும். இந்த தொகுப்பு “பெண்கள் கவிதைகள்” உள்ளடக்கியுள்ளது.