பொங்கல் வாழ்த்துகள்
தைத்திருநாளில் வளமுடன் வாழ, அன்பு பொங்க உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
பொங்கல் வாழ்த்துகள்
| Pongal Wishes in Tamilதமிழர்கள் பல விழாக்களை கொண்டாடுகின்றனர் அதில் முக்கியான விழாவான "பொங்கல் வாழ்த்துகள்" பதிவை இதில் காணலாம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதத்திலே மிக சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது தை மாதம். தமிழர் திருநாளான தை பொங்கலை அறுவடை திருநாளாக கூறுகிறார்கள். இந்த பொங்கல் திருநாள் தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை எடுத்துக் காட்டுகின்றது. இந்த மகிழ்ச்சியான நாளில் உங்கள் அன்புக்குரியவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்து செய்தி மூலம் தங்களது பொங்கல் வாழ்த்துகள் ( Pongal Wishes in Tamil ) புகைப்படங்களை அனுப்பி மகிழுங்கள்.
பொங்கல் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட! நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!
தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது புதுப்பானை பொங்கல் போல பிறக்கட்டும் புதுவாழ்வு திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனிதனின் மனது அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; தலைகள் நிமிரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும்; கதிரவன் விழிகள் நல்ல விடியலை கொடுக்கும்; அவலங்கள் அகலும்! இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
இல்லம் எனும் பானையில் பாசம் என்னும் பாலூற்றி.. அன்பெனும் அரிசி இட்டு.. நேசம் என்னும் நெய் ஊற்றி... இன்பம் என்னும் இனிப்பிட்டு உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி என்னும் பொங்கல் பொங்கிட இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!!
நோயற்ற சுகத்தை பெற்று மாசற்ற செல்வதை பெற்று அன்புடைய சுற்றத்தை பெற்று இதயத்தில் இன்பத்தை பெற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.. இனிய தை திருநாள் நல்வாழ்த்துகள்!!
வெல்லம், பால் மற்றும் உலர் பழங்களின் இனிப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிமையான வாழ்க்கையை தரட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்…
பொங்கலோ பொங்கல் என பொங்கட்டும் இல்லத்தில் அன்பும், அறனும் பெருகட்டும், இன்றுபோல் என்றும்! மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துகள்!
தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்க.. பொங்கல் வாழ்த்துகள்!
பொங்கல் திருநாளில் மனநிறைவு பொங்கட்டும், நல்ல அதிர்ஷ்டமும் செழிப்பும் உங்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்து வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
வீட்டைப் புதுப்பிக்கும்போது, உங்கள் வாழ்க்கையை அதிக மனநிறைவோடும், சிரிப்போடும், நல்ல ஆரோக்கியத்தோடும் புதுப்பிக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
பயிர்த் தொழில் என்பது உயிர்த் தொழிலாம்.. உழுது உழைப்போரும் உறுதுணை நிற்ப்போரும் உண்டு களிப்பொரும் வந்தனை செய்து சூரியனை நன்றி சொல்வோம்!! தரணி செழிக்க.. பொங்கலோ பொங்கல்!!!
எங்கோ ஒருவரின் உழவால் நம் உணவு நிச்சயமாகின்றது! ஏர் கலப்பை பூட்டி உழவு செய்து, உணவளித்து உயிர் காக்கும் அனைத்து உழவர்களுக்கும் துணை உழவரகளான காளையர்களுக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!!
மஞ்சள் கொத்தோடு, மாமரத்து இலையோடு, இஞ்சித் தண்டோடு, எறும்பூரும் கரும்போடு, வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க, பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது! பொங்கல் வாழ்த்துகள்!
இந்த இனிய திருநாளில் இறைவனை வணங்கி, பொன், பொருள், மகிழ்ச்சி இவ் அனைத்தும், அரும்சுவை பொங்கல் போல் உங்கள் வாழ்க்கையில் பொங்கிட, என் மனமார்ந்த பொங்கல் மற்றும் தைத் திருநாள் வாழ்த்துகள்!
சூரியன் தன் ஒளிக் கற்றை, இந்த பூமியின் மீது செலுத்துவதைப் போன்று, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்! பொங்கல் வாழ்த்துகள்!
இல்லத்தில் இன்பம் சூழ உள்ளத்தில் உற்சாகம் பொங்க வாழ்க்கையில் வளங்கள் வளர இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் பொங்கிடும் பொங்கலை போன்று வீடெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் !
அன்பும் ஆனந்தமும் பொங்கிட... அறமும் வளமும் தழைத்திட.. இல்லமும் உள்ளமும் பொங்க. இனிய தமிழர் திருநாளாம் நடிகை பொங்கல் நல்வாழ்த்துகள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் தைத் திருநாளில் வளமுடன் வாழ வாழ்த்துகள்
இனிய பொங்கல் வாழ்த்துகள் உங்கள் வாழ்க்கையில் ஆனந்தமும் ஆரோக்கியமும் பெருகட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்துக்கள் இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் சந்தோசத்தையும் கொண்டு வரட்டும்..!!!
இந்த பொங்கல் உங்கள் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும். பொங்கல் நல்வாழ்த்துகள்!
இல்லத்தில் இன்பம் சூழ.. உள்ளத்தில் உற்சாகம் பொங்க... வாழ்க்கையில் வளங்கள் வளர இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!
எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்
இன்பம் பொங்கி வழியட்டும் இல்லங்களிலும், உள்ளங்களிலும்! இனிய தை திருநாள் நல்வாழ்த்துகள்…
இனியவை எல்லாம் உங்கள் கரங்களில் சேரட்டும்.. இனிதொரு நாளிலிருந்து.. இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்!!
கரும்பாய் மகிழ்ச்சி இல்லத்தில் நிலைக்க என் இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!
இன்பம் பொங்கி, துன்பம் அணையட்டும்! இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
பொங்கல் வாழ்த்துகள்
பொங்கல் வாழ்த்துகள் ( Pongal Wishes in Tamil ): பொங்கல் என்பது தமிழர்களின் பழமையான பண்டிகையாகும். இத்திருவிழா சங்க காலத்திலிருந்து தமிழ் மக்களால் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா ஆகும். இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவர், இந்த நாளில் இறைவனை வணங்குவது மட்டுமல்லாது விவசாயத்துக்கு உதவும் உயிரினங்களையும் மக்கள் வணங்குகின்றனர். பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்துத் தரப்பு தமிழ் மக்களினாலும் கொண்டாடப்படுகின்றது.
நாகரீக வளர்ச்சியில் கலாசாரத்தின் தாக்கம் மற்றக் கலாசாரத்தின் மீது படிவது சாத்தியமான ஒன்றாகும். ஆனால் பொங்கல் பண்டிகை மற்றைய கலாசாரத்தைத் தம்முடன் இணைத்துக் கொண்டு மென்மேலும் சிறப்புப் பெறுகின்றது. இதற்குச் சான்றாகவே விதம் விதமான கோலங்களைத் தமிழ்ப் பெண்கள் போடுவதைத் தமிழ்க் கலாசாரம் ஒருபோதும் தடுப்பதில்லை. இவ்வாறாக பொங்கல் பண்டிகையானது கோலாகலமாகக் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் வாழ்த்துகள் அட்டைகளை பரிமாறி கொள்ளும் பழக்கம் தொடர்ந்து செய்யப்படுகிறது. அச்சு பதிக்க பட்ட வாழ்த்து அட்டகளுக்கு பதிலாக தற்போது குறுந்செய்திகள் பரிமாறப்படுகிறது. நாகரிக வளர்ச்சியில் தொலைதொடர்பு வளர்ந்து வருவதால் இந்த மாற்றம் உருவானாலும் ,பொங்கல் பண்டிகையின் வாழ்த்து சொல்லும் சாராம்சம் மாறவில்லை. பொங்கலின் புனிதமான சந்தர்ப்பத்தில், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில பொங்கல் வாழ்த்துகள், செய்திகள் மற்றும் மேற்கோள்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.